மதுக் கலத்து
அலர் பூ வாயான், வழிந்த தேன் ஒத்த சொல்லால்,
விதுக் கலத்து இழிந்த வில் போல், விரித்த நூல் அனைத்தும் கேட்டு,
புதுக் கலத்து எரித்த தீம் பால் பொங்கல் போல், உளத்தில் பொங்கி,
ஒதுக்கல் அற்று, அருவிக் கண்ணீர் உயிர்த்தனன் வாமன் மாதோ |
வடிந்த
தேனை ஒத்த சொல்லால் விண் மதியாகிய கலத்தினின்று
இறங்கிய பாலொளி போல், மதுக் கலமாகிய மலர் போன்ற அழகிய
வாயை உடையவனாகிய சூசை விரித்துக் கூறிய வேத நூற்கருத்துக்கள்
அனைத்தையும் வாமன் கேட்டு, புதுக் கலத்திலிட்டுச் சூடேற்றிய இனிய
பால் பொங்குவது போல், தானும் உள்ளத்தில் வருத்தம் பொங்க,
எவ்வகையாலும் அவற்றைப் புறக்கணிக்க இடமற்று, அருவி போல்
கண்ணீர் ஒழுக விம்மினான்.
| 128 |
நூற்கடற்
றுறையின் கேள்வி
நுணுங்கிய
புலமை யோன்சொற்
பாற்கடற் பதும மன்ன
படர்ந்தகண்
ணிமையா கேட்டு
மேற்கடற் றிரைகள் பொங்க
மேல்வளி
யடித்த தேபோ
னாற்கடற் றானையேறா
னவையறுத்
தெழுந்து சொன்னான். |
| |
நூல் கடல் துறையின்
கேள்வி நுணுங்கிய புலமையோன் சொல்
பால் கடல் பதுமம் அன்ன படர்ந்த கண் இமையா கேட்டு,
மேல் கடல் திரைகள் பொங்க மேல் வளி அடித்ததே போல்,
நால் கடல் தானை ஏறான் நவை அறுத்து எழுந்து சொன்னான். |
நூல்
வகைகளாகிய கடலைக் கேட்டு அறிந்தமையால் நுணுகிய
புலமை உடையவனாகிய சூசையின் சொல்லாகிய பாற்கடலில் தாமரை மலர்
போல் படர்ந்த தன் கண் இமை கொட்டாமல் படியக் கேட்டிருந்து, கடல்
போன்ற நால்வகைச் சேனைக்கும் ஆண் சிங்கம் போன்ற வாமன் மேலைக்
கடலில் திரைகள் பொங்க மேல் காற்று அடித்ததேபோல் தன்
குற்றமெல்லாம் உள்ளத்தினின்று அறுத்தெறிந்து எழுந்து நின்று பின்
வருமாறு சொல்லலானான்:
|