பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 364

                129
தீயவர் செல்லுஞ் செந்தீத்
     தேக்கிரு ணிலத்தைக் காட்டித்
தூயவர் செல்லும் வீட்டைத்
     தொடர்வழி காட்டல் செய்தாய்
காயவர் குளிர்ப்பத் தண்ணங்
     கருணையோ யெனவங் கண்வான்
மீயவ ருவப்பத் தாண்மேல்
     வீழ்ந்துநீ ராட்டி னானே.
 
"தீயவர் செல்லும் செந்தீத் தேக்கு இருள் நிலத்தைக் காட்டி,
தூயவர் செல்லும் வீட்டைத் தொடர் வழி காட்டல் செய்தாய்,
காய் அவர் குளிர்ப்பத் தண் அம் கருணையோய்!" என, அங்கண்
                                             வான்
மீ அவர் உவப்பத் தாள் மேல் வீழ்ந்து நீர் ஆட்டினானே.

     "உள்ளம் காய்வோர் குளிர்ச்சி பெறத் தக்க குளிர்ச்சியுள்ள அழகிய
கருணை கொண்டவனே, தீயவர் சென்று சேரும் செந்நிற நெருப்பைத்
தேக்கியுள்ள இருள் உலகமாகிய நரகத்தைச் சொல்லிக் காட்டுவதன் மூலம்,
தூயவர் சென்று சேரும் மோட்ச வீட்டை நாடிச் செல்வதற்கான வழியைக்
காட்டியுள்ளாய்!" என்று வாமன் கூறி, அங்கு வானத்தின் மேலுள்ள
வானவரும் மகிழுமாறு சூசையின் கால்களில் விழுந்து கண்ணீராற்
குளிப்பாட்டினான்.

 
                    130
விழுந்துற வெடுத்து டாபம்
     விளைத்தகட் கலுழி போற்றி
யழுந்துறத் தழுவி மெய்யோ
     டார்வமு முயிரு மொன்றச்
செழுந்துற விறைவன் சொன்ன
     தேறிய வுணர்விற் றேறி
யெழுந்துறத் தெளிந்த நெஞ்சா
     னிதனைமீண் டுரைத்தான் மாதோ.