பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 366

     "வாமன் தன்னை யானையாகவும், தன் பாவச் சார்பை யானையின்
மதமாகவும் உருவகித்துப் பேசுகிறான்.

 
            132
உள்ளுறத் தெளிநூ லாற்கீ
     ழுலகமே சுடுந்தீ யென்றா
யள்ளுறக் காமத் தீயை
     யவித்ததண் பொய்கை யன்றோ
வள்ளுறப் புகைமொய்த் தங்கண்
     மண்டிருள் தவழு மென்றாய்
தெள்ளுறக் கண்முன் னிட்ட
     திருவிளக் காயிற் றன்றோ.
 
"உள் உறத் தெளி நூலால், கீழ் உலகமே சுடும் தீ என்றாய்;
அள் உறக் காமத் தீயை அவித்த தண் பொய்கை அன்றோ?
வள் உறப் புகை மொய்த்து அங்கண் மண்டு இருள் தவழும் என்றாய்;
தெள் உறக் கண்முன் இட்ட திருவிளக்கு ஆயிற்று அன்றோ?

     "நீ உன் உள்ளத்தில் பொருந்தத் தெளிந்த வேதநூல் அறிவால்,
கீழுலகமாகிய நரகமே சுடும் தீ என்று சொன்னாய், தீயா அது? அள்ளிக்
கொண்ட தன்மையாய்க் காமத்தீயை அவித்த குளிர்ந்த தடாகம் அல்லவா
அது? அங்கே வளமாகப் புகைமொய்த்து மண்டிய இருள் தவழும் என்று
சொன்னாய்; அதுவே தெளிவு பெறக் கண்முன் இட்டு வைத்த திருவிளக்கே
ஆயிற்று அன்றோ?

 
           133
சுழல்தரப் புகைக ணாறுந்
     தூய்மலர்த் தவிசி றேம்பூ
நிழல்தரத் தொடலைக் கூந்த
     னீர்மையார் தோண்மேற் றுஞ்சி
யழல்தரக் கனன்ற மஞ்சத்
     தழன்றழன் றூழி காலம்
புழல்தரப் புண்பட் டங்கம்
     பொடிபட லினிதோ நெஞ்சே.