"அலை விரவு ஊழல்
வைகி, அரவின் நஞ்சு அயின்று, எஞ்ஞான்றும்
கொலை விரவு ஊழிச் செந் தீக்குளித்தலே இனியது என்றோ,
வலை விரவு அணியின் பின்னி மலர்தவழ் கூந்தல் வெஃகி,
புலை விரவு உணர்ந்த காமப் புணரியில் குளித்தாய், நெஞ்சே? |
"நெஞ்சே,
நெருப்பு அலைகள் கொண்ட நரகத்தில் தங்கி, பாம்பின்
நஞ்சை உணவாக உண்டு, கொலைத் தொழில் பொருந்திய ஊழிக் காலத்துச்
செந்தீயில் எந்நாளும் குளித்தலே இனியது என்று கருதியோ, வலை
அமைந்த அணிகலன் போல் மின்னலிட்டு மலர்கள் தவழும் மகளிர் கூந்தல்
அழகை விரும்பி, கீழ்மை கலந்ததாக உணர்ந்துள்ள காமக் கடலில்
குளித்தாய்?
| 137 |
கோடிழந்
தழியும் மைம்பூங்
கொள்கைவா
டெழிலைப் பேணி
யேடிழந் தொழுகுந் தேன்போ
லியைந்தபுல்
லின்ப நக்க
வீடிழந் தூழிச் செந்தீ
வீழநல்
லறங்கள் செய்யும்
பீடிழந் தொழுகு வாரிற்
பேதைய
ரில்லை நெஞ்சே. |
| |
"கோடு இழந்து
அழியும் பைம் பூங் கொள்கை வாடு எழிலைப்
பேணி,
ஏடு இழந்து ஒழுகும் தேன் போல் இயைந்த புல் இன்பம் நக்க,
வீடு இழந்து ஊழிச் செந்தீ வீழ, நல் அறங்கள் செய்யும்
பீடு இழந்து ஒழுகுவாரின் பேதையர் இல்லை, நெஞ்சே! |
"நெஞ்சே,
கிளையைப் பிரிந்து அழியும் பசும் பூவின் தன்மையாக
வாடக்சுடிய அழகைப் பேணி, இதழை விட்டுப் பிரிந்து ஒழுகும் தேன்
போல் அமைந்த அற்ப இன்பத்தை நக்கி உண்ணவும், அதன் பயனாய்
மோட்ச வீட்டை இழந்து நரகத்தின் ஊழிக் காலச் செந்தீயில் விழவும்
துணிந்து, நல்ல அறங்களைச் செய்யும் வலிமை இழந்து நடப்பவர் போல
அறிவிலிகள் யாருமே இல்லை.
|