"வள்ளிய உருவம்
தீமுன் வல்லையே உருகும் வண்ணத்து,
உள்ளிய அருமை யாவும் ஊழல் முன் கரைந்து நீங்கி,
எள்ளிய உள்ளம் கொள் மாசு இசைத்த நூல் பளிங்கில் கண்டு,
தெள்ளிய தவ நீர் ஆட்டி, செயிர் அறத் தெளிதி, நெஞ்சே! |
"நெஞ்சே,
மெழுகினால் செய்த உருவம் தீயின் முன் விரைவில்
உருகும் தன்மைபோல, மனத்தில் கருதிய அருமையான இன்பமெல்லாம்
நரக நினைவின்முன் கரைந்து நீங்குமாறு, உள்ளம் கொண்டுள்ள இகழத்
தக்க மாசுகளையெல்லாம் சூசை சொன்ன வேத நூலாகிய கண்ணாடியில்
கண்டு, தெளிந்த தவமாகிய நீரால் மனத்தைக் குளிப்பாட்டி, பாவம் அறும்
வழியைத் தெளிந்து கொள்வாய்.
| 140 |
தொல்வினை
இனிய வென்று
துகளுறத்
தோன்றுங் காலு
நல்வினை யரிய வென்று
நலங்கெடத்
தோன்றுங் காலுங்
கொல்வினை நிரையச் செந்தீக்
குளிப்பநல்
லுணர்விற் றாழ்ந்து
வல்வினை யூக்கம் பூண்டு
மருளலென்
னெஞ்சே யென்றான். |
| |
"தொல் வினை
இனிய என்று துகள் உறத் தோன்றும் காலும்,
நல் வினை அரிய என்று நலம் கெடத் தோன்றும் காலும்,
கொல் வினை நிரையச் செந்தீக் குளிப்ப நல் உணர்வில் தாழ்ந்து,
வல் வினை ஊக்கம் பூண்டு, மருளல், என் நெஞ்சே"! என்றான். |
"என்
நெஞ்சே, பழைய பாவச் செயல்கள் இனியவை என்று மீண்டும்
அப்பாவங்களைச் செய்யத் தோன்றும் காலத்திலும், நல் வினைகள்
செய்வதற்கு அரியவை என்று நலங்களைச் செய்யாது கெடத்தோன்றும்
காலத்திலும் கொல்லாது கொல்லும் செயலை உடைய நரகச் செந்தீயில் மூழ்க
நல்ல உள்ளத்தின் உணர்வால் தாழ்ந்து சென்று, வலிய நல்வினையே செய்ய
ஊக்கம் பெற்று, மயக்கம் தவிர்வாயாக" என்று வாமன் உரைத்து முடித்தான்.
|