| 143 |
ஐவழி யாசுதரும்
பொய்வழி போக்கியற
மெய்வழி மேவிநர
குய்வழி யொன்றுளதே. |
| |
"ஐ வழி ஆசு தரும்
பொய் வழி போக்கி,
அற மெய் வழி மேவி, நரகு
உய் வழி ஒன்று உளதே. |
"ஐம்புலன்களின்
வழியாகப் பாவத்தைத் தரும் பொய்யான வழியைப்
போக்கி, அறம் என்னும் மெய்வழியை விரும்பி, அதன் மூலம் நரகத்திற்குத்
தப்பி உய்யும் வழியாக வேத நூல் ஒன்றே உளது.
| 144 |
காதல லாதுகடுஞ்
சாதலி லாதுதகு
மோதலொ ளித்துநர
காதலும் வித்ததுவே. |
| |
"காதல் அலாது
கடுஞ்
சாதல் இலாது; தகும்
ஓதல் ஒளித்து, நரகு
ஆதலும் வித்து அதுவே. |
"ஆசையே
அல்லாமல், கொடுமையான சாவு வேறு ஒன்றும் இல்லை;
தகுதியான உபதேசத்தை மறைத்து, நரகம் சேர்தற்கும் அதுவே வித்து
ஆகும்.
'இலது'
என்ற சொல் நீட்டல் விகாரம் பெற்றது.
| 145 |
இறந்தனர்
வேகுமெரி
பிறந்தன ரோர்ந்துபெறிற்
றுறந்தனர் துஞ்சுளிவான்
சிறந்தனர் சீர்த்துவப்பார். |
|