பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 374

இறந்தனர் வேகும் எரி
பிறந்தனர் ஓர்ந்து பெறின்,
துறந்தனர், துஞ்சு உளி வான்
      சிறந்தனர் சீர்த்து உவப்பார்."


     "பாவிகளாய் இறந்தோர் வேகும் நரக நெருப்பை மனிதராய்ப்
பிறந்தோர் நினைந்து பெற்றுக் கொள்வாராயின், மேற்கூறிய ஆசையைத்
துறந்தவராய், இறக்கும்போது வான் வீட்டில் சிறந்தவராய்ப் பெருமை பெற்று
மகிழ்வர்."

 
           146
என்றன ரென்றெவருங்
கன்றினர் காட்சியுறீஇ
நின்றனர் வீட்டுநெறி
சென்றனர் சீர்பெறவே.
 
என்றனர்; என்று எவரும்
கன்றினர்; காட்சி உறீஇ
நின்றனர்; வீட்டு நெறி
சென்றனர் சீர் பெறவே.

     என்றெல்லாம் சூழ நின்று கேட்டோர் கூறினர்; கூறி எல்லோரும் தம்
பாவங்களை எண்ணி வருந்தினர்; அறிவுக் காட்சி பெற்று நின்றனர்; சிறப்புப்
பெறுமாறு வீடு பெறுவதற்கான நெறியில் நடந்தனர்.

 
        147
அள்ளிய வாமனரி
லெள்ளிய யாவருமே
தெள்ளிய சீரிறுதி
யுள்ளியன் றோதினரால்.
 

அள்ளிய வாமன் அரில்
எள்ளிய யாவருமே
தெள்ளிய சீர் இறுதி
உள்ளி அன்று ஓதினர் ஆல்.


     அள்ளிக் கொண்டது போன்ற வாமனின் குற்றங்களைப் பற்றி முன்
அவனை இகழ்ந்த யாவரும் இறுதியில் அவன் தெளிவு கொண்ட சிறப்பைக்
கருதி அன்று அவனைப் புகழ்ந்தனர்.