| 148 |
செல்வரு றுஞ்செயிரும்
வல்வரு மாண்பறமு
மெல்வரு மொத்தெவணுஞ்
சொல்வரு தோற்றமதே. |
| |
செல்வர் உறும்
செயிரும்,
வல் வரும் மாண்பு அறமும்,
எல் வரும் ஒத்து, எவணும்
சொல் வரு தோற்றம் அதே. |
செல்வர்
செல்வத்தால் அடையும் பாவமும் அதைக் கொண்டே
வலுவுறச் செய்யும் மாண்புள்ள அறமும், ஞாயிறு உதித்து வருதலைப்
போன்று, எங்கும், இகழ்ந்தோ புகழ்ந்தோ, சொல்லைப் பிறப்பிக்கும்
தோற்றம் உடையதாம்.
இது
முந்திய பாடலுக்கு விளக்கமாக அமைந்தது. செல்வமுடையோர்
பாவமும் அறமும் எங்கும் பேசப்படுதல்போல், முன் குற்றங் கருதி வாமனை
இகழ்ந்த யாவரும், அவன் திருந்திய விடத்துப் புகழ்ந்தனர் என்பது கருத்து.
சூசை
தேற்றுரை
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 149 |
தெளித்தகா
லுரைத்த விஞ்சை
சிறப்புற
வுழுத பூழி
துளித்தகால் விதைத்த லென்னத்
துணிவுறத்
தெளிந்த வாமன்
களித்தகா லுணர்ந்த ஞானங்
காய்ந்தகாற்
சிதையு மோவென்
றளித்தகா லிதுவென் றாய்ந்த
வருந்தவ
னினிதிற் சொன்னான். |
|