பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 376

தெளித்த கால் உரைத்த விஞ்சை சிறப்பு உற, உழுத பூழி
துளித்த கால் விதைத்தல் என்ன, துணிவு உறத் தெளிந்த வாமன்
களித்த கால் உணர்ந்த ஞானம் காய்ந்த கால் சிதையுமோ என்று,
அளித்த கால் இது என்று ஆய்ந்த அருந்தவன் இனிதின் சொன்னான்:


     தெளிந்த காலத்தில் உரைத்த கல்வி என்றும் சிறந்த பயனைத்
தருமாறு, உழுத புழுதியில் மழை பெய்த காலத்தில் விதைத்தல் போல,
துணிவு கொண்டு தெளிந்த வாமன் களிப்புற்ற காலத்தில் உணர்ந்து
கொண்ட ஞானம் பாவ நாட்டத்தால் காய்ந்த காலத்தில் அழிந்து
போகுமோ என்று கருதி, அவனைக் காப்பதற்குத் தக்க காலம் இதுவே
என்று ஆராய்ந்து கண்ட அரிய தவத்தோனாகிய சூசை இனிமையாகச்
சொல்லத் தொடங்கினான்:

 
             150
ஐம்பொறிப் பகைகண் டஞ்சி
     யடக்கலி னாமை போல்வாய்
வெம்பொறிப் புதவை யோர்ந்து
     விளைபகை சிறிதென் றெண்ணேல்
பைம்பொறிப் பாந்த டன்கூர்ப்
     பல்பட மதநீர்க் குன்றிற்
செம்பொறிப் புகைக்கண் யானை
     சிதைந்துயிர் மாளூ மன்றோ.
 
"ஐம் பொறிப் பகை கண்டு அஞ்சி, அடக்கலின் ஆமை போல்வாய்.
வெம் பொறிப் புதவை ஓர்ந்து, விளை பகை சிறிது என்று எண்ணேல்.
பைம் பொறிப் பாந்தள் தன் கூர்ப் பல் பட மதநீர்க் குன்றின்
செம் பொறிப் புகைக் கண் யானை சிதைந்து உயிர் மாளும் அன்றோ?

      "ஐம் பொறிகள் தரும் பாவ நாட்டப் பகையைக் கண்டு அஞ்சி,
அவற்றை அடக்கியாளும் தன்மையில் ஆமையைப் போல் நடப்பாய்.
வெப்பமான தீப்பொறி பறக்கும் நரகத்தை எப்போதும் நினைவிற் கொண்டு,
விளைந்த பாவப்பகை எதனையும் சிறியது என்று எண்ணாதே, படமும்