பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 377

புள்ளியும் கொண்ட நாகப் பாம்பின் கூர்மையான பல் பதியவே மத
நீரையுடை குன்று போன்றதும் செம் பொறி பறக்கச் சினத்தால் புகையும்
கண்களை உடையதுமான யானை வலி அழிந்து உயிர் மாளும் அன்றோ?

     "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின், எழுமையும்
ஏமாப்பு உடைத்து" என்ற குறள் (126) இங்கு நினைக்கத்தக்கது.

 
               151
பிரிந்ததென் றொழித்த பாவம்
     பெறுமிடத் தணுகேல் வேலோ
யரிந்ததென் றுறங்கு மாசை
     யமைதியால் விழித்துக் கொல்லு
மெரிந்த நின் காமத் தீயை
     யிற்றற வவித்த தென்னேல்
கரிந்ததென் றிருந்த பல்காற்
     கால்முகத் தெரியுந் தீயே.
 
"பிரிந்தது என்று ஒழித்த பாவம் பெறும் இடத்து அணுகேல், வேலோய்!
அரிந்தது என்று உறங்கும் ஆசை அமைதியால் விழித்துக் கொல்லும்.
எரிந்த நின் காமத் தீயை இற்று அற அவித்தது என்னேல்.
கரிந்தது என்று இருந்த பல் கால் கால் முகத்து எரியும் தீயே.

     "வேலை உடைய வீரனே, விட்டொழித்த பாவம் உன்னை விட்டுப்
பிரிந்தே போயிற்று என்று துணிந்து, அதனைப் பெறக் கூடிய இடத்தை
அணுகாதே. அரிந்து விட்டதாகக் கருதினாலும், உள்ளே உறங்கிக் கிடக்கும்
ஆசை சமயங் கண்டு விழித்துக் கொல்ல முற்படும். எரிந்து கொண்டிருந்த
உன் காமத் தீயைக் கெடுமாறு அறவே அவித்து விட்டதாகவும் கருதாதே.
கரியாயிற்று என்று இருந்த உள்ளடங்கிய தீ பல காலும் காற்றடித்த இடத்து
எரியத் தொடங்கும்.

     எனவே, பாவத்திற்குரிய இடத்தையும் சமயத்தையும் விலக்க வேண்டும்
என்பதாயிற்று.