"செம்பு அதின்
பிறப்பு ஐந்தோடும் சிறப்பு அணி வனைஅப்பேழை
தம் பதி வரக் கை கூப்பாத் தருக்கொடு நோக்க, கால் முன்
கொம்பு அதின் இலைகள் போலக் குழைந்த பெற்சமித்தார் அங்கண்
ஐம்பதினாயிரத்து ஏழு அமைந்த பத்து ஒருங்கு வீழ்ந்தார். |
"செம்பும்
அதன் இனமுமாகிய ஐந்து உலோகங்களாலும் சிறப்பாய்
அழகுசெய்யப்பெற்று அப்பேழை தம்நகருக்குவர, அதனைக் கை கூப்பி
வணங்காத செருக்கோடு பார்த்து நின்ற குற்றத்தால், பெருங்காற்றின் முன்
மரக் கொம்பிலுள்ள இலைகள் போலக் குழைந்த பெற்சமித்து ஊரார்
ஐம்பதினாயிரத் தெழுபது பேர் அவ்விடத்தில் ஒன்றாக மடிந்தனர்.
செம்பும்
அதன் இனமுமாகிய ஐந்து உலோகங்கள்: பொன் வெள்ளி,
செம்பு, இரும்பு, ஈயம், செம்பது, கொம்பது என்பவற்றுள் 'அது' என்பது
சாரியை. ஏழு அமைந்த பத்து - ஏழு பத்து; எழுபது (1 சாமு. 6 : 19 - 21)
| 65 |
அள்ளிய
வபயர் நாப்ப
ணரசனு
மிறைஞ்சிச் செல்லத்
தெள்ளிய மறையின் பேழை
தேர்மிசை
வரலிற் சாய்ந்து
விள்ளிய வலங்க லோசன்
விழுமெனக்
கையாற் றீண்ட
வுள்ளிய வுலக மஞ்ச
வுருமுபட்
டன்ன மாண்டான். |
| |
"அள்ளிய அபயர்
நாப்பண் அரசனும் இறைஞ்சிச் செல்ல,
தெள்ளிய மறையின் பேழை தேர்மிசை வரலின், சாய்ந்து,
விள்ளிய அலங்கல் ஓசன், விழும் எனக் கையால் நீண்ட
உள்ளிய உலகம் அஞ்ச உருமு பட்டன்ன மாண்டான். |
"தெளிந்த
வேத கட்டளை அடங்கிய பெட்டகம் தேரின்மீது வந்து
கொண்டிருந்தது. திரண்ட படைவீரர் நடுவே தாவீது மன்னனும் அதனை
வணங்கிச் சென்றுகொண்டிருந்தான். மலர்ந்த பூமாலை அணிந்த ஓசன்
என்பான் அது சாய்ந்து விழுமென்று கருதித் தனது கையினால் தொட்டான்.
அதனை நினைத்தாலே உலகம் அஞ்சும் வகையில் இடியினால்
தாக்குண்டவன்போல் மடிந்தான்.
|