பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 39

      குருக்களன்றிப் பிறர் தொடத் தகாமையின், ஓசன் அவ்வாறு
மாண்டான். (2 சாமு. 6 : 6 - 7)

 
          66
ஆதிநீ டுடன்ற காலத்
     தம்புவி கூசச் செய்த
நீதிநீ யறிதி யன்றே
     நினக்கியா னுரைப்ப தென்னோ
வேதினீ யிறைஞ்சும் வேதத்
     திவையெலாம் புரிந்த நாதன்
றீதினீ யுயிரீ றாகத்
     தேடுகின் றவனே யன்றோ.
 
"ஆதி நீடு உடன்ற காலத்து அம்புவி கூசச் செய்த
நீதி நீ அறிதி அன்றே? நினக்கு யான் உரைப்பது என்னோ?
ஏதின் நீ இறைஞ்சும் வேதத்து இவையெலாம் புரிந்த நாதன்
தீதின் நீ உயிர் ஈறு ஆகத் தேடுகின்றவனே அன்றோ?

      "காலம் நெடுகிலும் ஆதிக் கடவுள் சினந்த காலத்து அவ் வழகிய
உலகம் கூசி நடுங்குமாறு தாம் செய்த நீதிச் செயல்களை நீயே அறிவாய்
அல்லவா? உனக்கு நான் உரைக்க வேண்டியது என்னவோ? தக்க
காரணத்தோடு நீ மதித்துப் போற்றும் வேதத்தில் இவற்றையெல்லாம்
செய்தவன் ஆண்டவனே. நீ தீமையால் உயிருக்கு இறுதி செய்யத்
தேடுகின்றவனும் அவனேயன்றோ?

      நினக்கு + யான் = நினக்கியான்; குற்றியலுகரம் இகரமாய்த் திரிந்தது.

 
              67
அறத்துறுந் தகையுஞ் செங்கோ
     லாண்மையு மொளியு நீங்க
மறத்துறுந் தீங்கு தன்பால்
     வந்தபி னாவ துண்டோ