புறத்துறுந்
துயர்கண் டுய்வார்
பொலிந்தநூற்
புலமை நீரார்
நிறத்துறுந் தொடையன் மார்ப
நிகர்ப்பரு
நிலையி தன்றோ |
| |
"அறத்து உறும்
தகையும் செங்கோல் ஆண்மையும் ஒளியும் நீங்க
மறத்து உறும் தீங்கு தன்பால் வந்த பின் ஆவது உண்டோ?
புறத்து உறும் துயர் கண்டு உய்வார் பொலிந்த நூல் புலமை நீரார்;
நிறத்து உறும் தொடையல் மார்ப, நிகர்ப்பு அரு நிலை இது அன்றோ? |
"அறத்தினால்
வரும் மாட்சியும் செங்கோலுக்கு வலிமையும் தனக்கு
வரும் புகழும் நீங்குமாறு பாவத்தினால் உண்டாகும் தீங்கு தன்னிடத்து
வந்த பின் செய்யக் கூடியது ஏதேனும் உண்டோ? விளங்கிய நூலறிவின்படி
ஒழுகும் தன்மை உடையார் புறத்துப் பிறர் ஏதேனும் ஒன்றால் அடையும்
துயரத்தைக் கண்டு தாம் அதனை விலக்கி உய்தி பெறுவார்; அழகுடன்
விளங்கும் மாலை அணிந்த மார்கை உடையவனே, இது ஒப்பற்ற
உயர்நிலை அன்றோ?
| 68 |
கட்புல
னுணர்த்துங் காட்சிக்
கசடர்சொல்
லுதவி கேளேல்
மட்புல னளிப்ப நாதன்
மைந்தனா
யுதித்தா னென்ன
வுட்புலன் றெளிந்தன் னானை
யொருங்குநீ
தொழுதி பின்னர்
விட்புலம் வேந்த னாக
வினையற
வாழ்வா யென்றான். |
| |
"கண் புலன் உணர்த்தும்
காட்சிக் கசடர் சொல் உதவி கேளேல்.
மண் புலன் அளிப்ப நாதன் மைந்தனாய் உதித்தான் என்ன
உள் புலன் தெளிந்து, அன்னானை ஒருங்கு நீ தொழுதி; பின்னர் விண் புல வேந்தனாக
வினை அற வாழ்வாய்" என்றான். |
|