|
"கண்ணாகிய
புலன் உணர்த்தும் அறிவு மட்டுமே கொண்டுள்ள
கசடர் உதவி போற் சொல்லும் வார்த்தையைக் கேட்டு நடவாதே.
மண்ணுலகத்தைக் காப்பதற்கென்று ஆண்டவன் மனிதனாக
அவதரித்தானென்று உள்ளுணர்வினால் தெளிந்து, அவனை நீ ஒரு
மனமாய்த் தொழுவாயாக. இவ்வாறு தொழுத பின்னர் உனது பாவ
வினையெல்லாம் நீங்க விண்ணுலக வேந்தனாக நிலைத்து வாழ்வாய்" என்று
ஏலியன் முடித்துக் கூறினாள்.
எரோதன்
கொடுமை
| 69 |
நாற்கடற்
கவியின் பாட
னயம்பெறாக்
கேட்ட கோகோ
பாற்கடற் றிரிந்து நச்சுப்
பயன்பெறும்
பாந்த டானோ
நூற்கடற் கேள்வி நல்லேர
னுவன்றவை
கேட்டுக் கால்முன்
மேற்கடற் சினத்து வேந்தன்
மிக்குளம்
வெகுண்டு சொன்னாள். |
| |
நால் கடல் கவியின்
பாடல் நயம் பெறா கேட்ட கோகோ?
பாற் கடல் திரிந்தும் நச்சுப் பயன் பெறும் பாந்தள் தானோ?:
நூல் கடல் கேள்வி நல்லோன் நுவன்றவை கேட்டுக் கால் முன்
மேல் கடல் சினத்து வேந்தன் மிக்கு உளம் வெகுண்டு சொன்னான் |
கடல்
போல் பரந்த நாற்கவிப் புலவனின் பாடலை அதன் நயம்
உணராது கேட்ட கழுதையோ? பாற்கடலில் திரிந்து அமுதம் பெறாமல்
நஞ்சே பயனாகப் பெறும் பாம்பு தானோ? கடல் போன்ற நூல்களைக்
கேட்டறிந்த நல்லோனாகிய ஏலியன் சொல்லியவற்றை அரசனாகிய
எரோதன் கேட்டு, காற்றினால் மேற்குக்கடல் பொங்குவது போல் மனம்
மிகுதியாக வெகுண்டு சொல்லத் தொடங்கினான்:
நாற்கவி:
ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என இவை.
திருப்பாற்கடல் கடைந்த புராணச் செய்தி சுட்டப்படுகிறது. பெறா -பெறாது
என்ற எதிர்மறை வினையெச்சம் ஈறு கெட்டது.
|