கயல் பொருது
உகளிப் பாயக் கலங்கிய குமரி அன்னம்
அயல் பொரு சேவலோடும் அதிர்ந்து எழச்சாய்ந்தசெந் நெல்
வயல் பொருவு ஒழிந்த நாடு, வளன் தரும் ஓதி தன்னால்
புயல் பொருது உயர் வான் வீட்டைப் புகும் மறுகு ஆயிற்று அன்றோ. |
கயல்
மீன்கள் தம்முள் போரிட்டுக் குதித்துப் பாய்தலால் கலங்கிய
அன்னப் பேடை அயலில் தன்னோடு பொருது கொண்டிருந்த அன்னச்
சேவலோடும் அதிர்ந்து எழுந்து பறக்க, அதனால் சாய்ந்த செந்நெல்
வயலால் தனக்கு ஒப்புமை அற்ற எசித்து நாடு, இவ்வாறு வளன் தரும்
உபதேசத்தால், மேகங்கள் ஒன்றோடொன்று மோதி உயர்ந்து எழுகின்ற
மோட்ச வீடு சென்று புகுவதற்குரிய தெருவாய் மாறிற்று.
வாம
னாட்சிப் படலம் முற்றும்
ஆகப்
படலம் 28க்கு விருத்தம் 2810
|