பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 384

இருபத்தொன்பதாவது
 

வேதக் கெழுமைப் படலம்
 


     சூசையின் சொல்லாலும் செயலாலும் எசித்து நாட்டில் வேதம்
தழைத்ததைக் கூறும் பகுதி.

                  சூசை தரும் கனவு விளக்கம்

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
               1
தாயணி யாக மார்பிற்
     றனையனே துஞ்சும் போல
வேயணி யாக வேய்ந்த
     வேதநூல் துஞ்சு மார்பன்
காயணி யாக வாய்ந்த
     காவின்மீண் டொருநாள்வைகி
வாயணி யாக வோதி
     வகுத்துநீ டுரைத்தான் மாதோ.
 
தாய் அணி ஆக மார்பில் தனையனே துஞ்சும் போல,
வேய் அணி ஆக ஏய்ந்த வேத நூல் துஞ்சு மார்பன்,
காய் அணி ஆக வாய்ந்த காவில் மீண்டு ஒரு நாள் வைகி,
வாய் அணி ஆக ஓதி வகுத்து நீடு உரைத்தான் மாதோ.

     தாய்க்கு அணிகலனாக மார்பில் உறங்கும் மகனே போல, சூடும்
அணிகலனாகப் பொருந்திய வேத நூல் தங்கி அமைந்த மார்பை
உடையவனாகிய சூசை, மரங்களில் காய்களே அணிகலனாகப் பொருந்திய
சோலையில் மீண்டும் ஒருநாள் அமர்ந்திருந்து, தன் வாய்க்கே ஓர்
அணிகலன் போன்று வேத உபதேசங்களை நெடு நேரம் வகைப்படுத்திச்
சொல்லிக் கொண்டிருந்தான்.

 
              2
ஏழ்வருங் கதிரைத் துய்ப்ப
     வேடவிழ் கமலம் போலச்
சூழ்வருங் குழாத்தி யாருஞ்
     சுருதிநூல் செவியின் மாந்திக்