பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 385

கேழ்வரும் பதுமம் பெய்தேன்
     கீடமுண் டிமிரும் போலத்
தாழ்வரும் புரைக ணீக்கித்
     தகவுறீஇப் புகழ்ந்து நின்றார்.
 
ஏழ்வரும் கதிரைத் துய்ப்ப ஏடு அவிழ் கமலம் போல,
சூழ்வரும் குழாத்து யாரும் சுருதி நூல் செவியின் மாந்தி,
கேழ்வரும் பதுமம் பெய் தேன் கீடம் உண்டு இமிரும் போல,
தாழ்வரும் புரைகள் நீக்கி, தகவு உறீஇ, புகழ்ந்து நின்றார்.

     எழுந்து வரும் பகலவனின் கதிரை உண்பதற்கு இதழ்களை விரிக்கும்
தாமரை போல், சூழ்ந்து நின்ற கூட்டத்திலுள்ள யாவரும் வேத நூலைச்
செவிகளால் பருகி, நிறத்தோடு மலர்ந்து வரும் தாமரை தன்னுட் பெய்து
வைத்த தேனை வண்டுகள் உண்டு பாடுவதுபோல், தாழ்வு வருதற்குக்
காரணமான பாவங்களை நீக்கி, மாண்பு அடைந்து, சூசையைப் புகழ்ந்து
நின்றனர்.

     குழாத்து + யாரும் - 'குழாத்தியாரும்' எனக் குற்றியலுகரம் இகரமாகத்
திரிந்தது. உறீஇ - சொல்லிசை அளபெடை.

 
          3
கூனுருக் கோலி லூன்றிக்
     குலுங்கிய சென்னி யாட்டி
யூனுருக் கழிந்த நீண்டோ
     லுடுத்தவென் பொழுங்கிற் றோன்றி
மீனுருக் கழிந்த கட்புண்
     மெலிமுகச் சுரமி யென்பாள்
வானுருத் தவத்தோன் சொன்ன
     மறைமொழி பழித்துச் சொன்னாள்.
 
கூன் உருக் கோலின் ஊன்றி, குலுங்கிய சென்னி ஆட்டி,
ஊன் உருக் கழிந்த நீண்தோல் உடுத்த என்பு ஒழுங்கின் தோன்றி,
மீன் உருக் கழிந்த கண்புண் மெலிமுகச் சுரமி என்பாள்
வான் உருத் தவத்தோன் சொன்ன மறைமொழி பழித்துச் சொன்னாள்:

     கூனிய தன் உருவத்தை ஒரு கோலில் ஊன்றித் தாங்கிக் கொண்டும்,
நடுங்கிய தலையை ஆட்டிக் கொண்டும், தசையால் உண்டாகும் உருவம்
இல்லாமல் நீண்டு தொங்கும் தோலால் பொதிந்த எலும்புகள் ஒழுங்காக
வெளியே தோன்றவும்,