பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 386

மீன் போன்ற உருவம் இழந்த கண்கள் புண்ணாகத் தோன்றும் மெலிந்த
முகமுள்ள சுரமி என்பவள் சிறந்த உருவுடைய தவத்தோனாகிய சூசை
சொன்ன வேத மொழிகளைப் பழித்து உரைக்கலானாள்:

 
             4
விள்ளிய புதித்தேன் பைம்பூ
     விரும்பிநற் கனிநீத் தன்ன
தெள்ளிய தவத்திற் பன்னா
     டேடிய பயன்கள் யாவு
மெள்ளிய வவத்தி னீங்க
     விறைஞ்சிய தேவர் நீக்கி
யுள்ளிய நவநூ லெண்ணி
     யொழுகலோ வுறுதி யென்றாள்.
 
"விள்ளிய புதித் தேன் பைம்பூ விரும்பி, நல் கனி நீத்து அன்ன,
தெள்ளிய தவத்தின் பல் நாள் தேடிய பயன்கள் யாவும்
எள்ளிய அவத்தின் நீங்க, இறைஞ்சிய தேவர் நீக்கி,
உள்ளிய நவ நூல் எண்ணி ஒழுகலோ உறுதி?" என்றாள்.

     "மலர்ந்த புதிய தேனுள்ள பசுமையான மலரைப் பின் கனி தருமென்று
விரும்பி, நல்ல கனியை விலக்கியது போல, தெளிந்த தவத்தின் மூலம் பல
நாட்களாய்த் தேடி வைத்த பயன்களெல்லாம் இகழ்ச்சியோடு வீணே
நீங்குமாறு, முன் வணங்கிய தேவர்களை விலக்கிக் கொண்டு, கருதிய புது
நூலைப் பெரிதாய் எண்ணி நடப்பதோ நன்மை பயப்பது?" என்றாள்.

 
              5
குடக்குநேர் வைகுந் தேயங்
     குணித்தனர் செப்ப மாறி
வடக்குநேர் நெடுநாட் செல்ல
     வழியதன் றென்று கேட்கிற்
றொடக்குநேர் தடஞ்செல் லாதாற்
     றுயரலாற் காட்டு கின்ற
கிடக்குநேர் நெறிசெல் லாரோ
     கேள்விய ரென்றான் சூசை.