பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 389

"சுனை வளர் குவளை ஆதி சொரி மது மலர்கள் வாடி,
நனை வளர் பொய்கை வற்ற நான் இன்று கனவில் கண்டேன்.
வினை வளர் நவங்கள் காட்டி விரித்த நின் சொல்லைக் கேட்டு,
பனை வளர் நாடு நைந்த பரிசு இதே!" என்றாள் மூத்தாள்.


     முதியவளாகிய சுரமி, "தடாகத்தில் வளரும் குவளை முதலிய தேன்
சொரியும் மலர்கள் வாடவும், அரும்புகள் வளரும் அத்தடாகமே இறுதியில்
வற்றிப் போகவும் நான் இன்று கனவில் கண்டேன். தீமை வளர்வதற்குக்
காரணமான புதுமைகளைக் காட்டி விரித்த உன் சொல்லைக் கேட்டு, பனை
மரங்கள் வளரும் இந்த எசித்து நாடு கெட்டழிந்த தன்மைக்கு இதுவே
அடையாளம்" என்றாள்.

 
            9
தெருடவழ் பகலி னோக்கச்
     சிதைந்தகண் கிழவி யில்லா
திருடவ ழிரவி னோக்க
     லியன்பென வெவரு நக்கார்
மருடவழ் சினங்கொண் டன்னாள்
     வடிவுறுங் கனவும் பொய்யோ
பொருடவழ் கிலதேற் றோன்றப்
     பொருட்டென்னோ சொன்மி னென்றாள்.
 
"தெருள் தவழ் பகலின் நோக்கச் சிதைந்த கண் கிழவி இல்லாது,
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு!" என எவரும் நக்கார்.
மருள் தவழ் சினங் கொண்டு அன்னாள், "வடிவு உறும் கனவும்
                                             பொய்யோ?
பொருள் தவழ்கிலதேல், தோன்றப் பொருட்டு என்னோ? சொன்மின்!"
                                             என்றாள்.

     "ஒளி தவழும் பகலில் பார்க்கவே தன் சிதைந்த கண்ணில்
ஒளியில்லாமல், இக்கிழவி இருள் தவழும் இரவில் பார்த்தல் இயல்பேயாம்!"