11 |
படம்புனைந்
தெழுதி னாற்போற்
பகலிடை யிருகண் ணோடைந்
திடம்புனைந் துணர்ந்த யாவு
மெழுதிய நினைவி றோன்றிக்
கடம்புனைந் ததிர்கைம் மாவுங்
காகமுங் கண்ட தொன்றிச்
சடம்புனை கனவில் யானை
தலைக்குமேற் பறக்கக் காண்பார். |
|
"படம் புனைந்து
எழுதினாற் போல், பகல் இடை இரு கண்ணோடு ஐந்து
இடம் புனைந்து உணர்ந்த யாவும் எழுதிய நினைவில் தோன்றி,
கடம் புனைந்து அதிர் கைம் மாவும் காகமும் கண்டது ஒன்றி,
சடம் புனை கனவில் யானை தலைக்கு மேல் பறக்கக் காண்பார். |
"பகலில்
இரண்டு கண்களோடு ஐம் பொறிகள் மூலம் பொருந்த
உணர்ந்த யாவும், சித்திரப் படத்தை அழகுபடுத்தி எழுதினாற் போல்,
பதிய வைத்த நினைவில் தோன்றி நிலைக்கும். அதனால், மதம் பொருந்தி
முழங்கும் துதிக்கையுள்ள யானையையும் காகத்தையும் பகலிற் கண்ட காட்சி
ஒன்றாக மயங்கி, இரவில் பொய் பொருந்திய கனவில் யானை தலைக்குமேல்
பறப்பதாகக் காண்பர்.
கைம்மா
- கை + மா - துதிக்கையை உடைய விலங்கு: யானை
12 |
தெருள்புறங்
கொண்ட வத்தஞ்
சேர்ந்தடுத் தவற்றைக் காட்டு
மருள்புறங் கொள்க னாவு
மனங்கடுத் தவற்றைக் காட்டி
யருள்புறங் கொண்ட தாயே
யகன்றதன் மகவைக் காண்பாள்
வெருள்புறங் கண்ட பேதை
வினைப்படை யெதிர்ப்பக் காண்பான்.
|
|