"தெருள் புறம்
கொண்ட அத்தம் சேர்ந்து அடுத்த வற்றைக் காட்டும்.
மருள் புறம் கொள் கனாவும் மனம் கடுத்தவற்றைக் காட்டி,
அருள் புறம் கொண்ட தாயே அகன்ற தன் மகவைக் காண்பாள்;
வெருள் புறம் கண்ட பேதை வினைப் படை எதிர்ப்பக் காண்பான். |
"தெளிவைத்
தன்னிடம் கொண்டுள்ள கண்ணாடி தன்னை அடுத்துச்
சேர்ந்தவற்றை உருவமாகக் காட்டும். அது போலவே, மயக்கத்தைத் தன்பால்
கொண்டுள்ள கனவும் மனத்தில் மிகுந்த உணர்வுகளைக் காட்டும். அவ்வாறு,
பிள்ளை மீது அருள் கொண்டுள்ள தாய் பிரிந்த தன் பிள்ளையைக் கனவில்
காண்பாள்; அச்சத்தைத் தன்னிடம் கொண்டுள்ள பேதை போர் வினைக்கு
உரிய படை தன்னை வந்து எதிர்ப்பதாகக் கனவில் காண்பான்.
"அடுத்தது
காட்டும் பளிங்குபோல் நெஞ்சம், கடுத்தது காட்டும்
முகம்". என்ற குறள் (706) முகத்திற்குச் சொன்னது கனவிற்கும் பொருந்துதல்
காண்க.
13 |
காய்ந்தவோர்
சுரமெய் நொந்தார்
கடிமலர்ச் சுனைகள் காண்பார்
வேய்ந்தவோர் பழியைக் கொண்டார்
வினைப்பகை முரியக் காண்பார்
தீய்ந்தவோர் மிடியின் மிக்கார்
திருநல மருவக் காண்பார்
வாய்ந்தவோர் பற்றல் பாலால்
வருங்கன வுருவ மாதோ. |
|
"காய்ந்த ஓர்
சுரம் மெய் நொந்தார் கடி மலர்ச் சுனைகள்
காண்பார்;
வேய்ந்த ஓர் பழியைக் கொண்டார் வினைப் பகை முரியக்
காண்பார்;
தீய்ந்த ஓர் மிடியின் மிக்கார் திரு நலம் மருவக் காண்பார்;
வாய்ந்த ஓர் பற்றல் பாலால் வரும் கனவு உருவம் மாதோ. |
|