பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 393

     "கனவில் காணும் உருவம் அவரவர் மனத்துள் பொருந்திய
பற்றுதலின் அடிப்படையில் வரும்; வெயில் காய்ந்த ஒரு பாலைவனத்தில்
நடந்து உடல் நொந்தவர் மணமுள்ள மலர்த் தடாகங்களைக் கனவில்
காண்பர்; வென்றவர் மீது பொருந்திய ஒரு பழி வாங்கும் எண்ணம்
கொண்டவர் தம் பகைவினைக்கு உரியவர் தோற்று ஓடக் காண்பர்;
தீப்போல் வாட்டிய ஒரு வறுமை மிக்கவர் செல்வ நலம் தம்மை
வந்தடையக் காண்பர்.

 
              14
இருட்படப் புகைமொய்த் தென்ன
     வெஞ்சிய வறிவு குன்று
மருட்படப் புகைந்து மண்டி
     மலிந்தபித் தேறுங் காலைத்
தெருட்படத் தெளிந்த தேபோற்
     சீரில கனவு காட்டி
வெருட்படப் பதைத்துள் ளஞ்சி
     வினைகொள்வார் பித்தர் அன்றோ.
 
"இருள்படப் புகை மொய்த்து என்ன, எஞ்சிய அறிவு குன்றும்
மருள்படப் புகைந்து மண்டி மலிந்த பித்து ஏறும் காலை
தெருள்படத் தெளிந்ததே போல் சீர் இல கனவு காட்டி,
வெருள்படப் பதைத்து உள் அஞ்சி வினை கொள்வார் பித்தர் அன்றோ?

     "இருள் உண்டாகுமாறு புகை மொய்த்தாற் போல, எஞ்சியுள்ள
அறிவும் குன்றத்தக்க மயக்கம் ஏற்படுமாறு புகைந்து திரண்டு நிறைந்த
பித்தம் தலைக்கு ஏறும்போது, தெளிவு படத் தெளிந்ததே போல் பொருட்
சிறப்பு இல்லாத கனவைக் கொண்டு காட்டும். அதை நம்பி, மயங்கி, நடுங்கி,
மனத்துள் அச்சங்கொண்டு, செயலாற்ற முற்படுவோர் பித்தர் தாமே.

 
          15
விஞ்சிய காலைப் பித்து
     வினையினாற் பித்தர் செம்மை
யெஞ்சிய நினைவுற் றாயா
     திழிவுறப் பிதற்றுஞ் சொல்லுந்