துஞ்சிய காலை
மெய்போற்
றோன்றிய
கனவு மொன்றா
யஞ்சிய வுளத்திஃ தெண்ணி
லறிவிதோ
வென்றான் சூசை. |
|
"விஞ்சிய காலைப்
பித்து வினையினால் பித்தர் செம்மை
எஞ்சிய நினைவு உற்று, ஆயாது, இழிவு உறப் பிதற்றும் சொல்லும்,
துஞ்சிய காலை மெய் போல் தோன்றிய கனவும் ஒன்று ஆய்,
அஞ்சிய உளத்து இஃது எண்ணில், அறிவு இதோ?" என்றான் சூசை. |
"பித்தம்
மேலோங்கிய போது, அதன் செயலால் பித்தம் கொண்டவர்
செம்மையற்ற நினைவு கொண்டு, ஆராயாமல், தமக்கே இழிவு நேருமாறு
பிதற்றும் பேச்சும், தூங்கியபோது உண்மை போல் தோன்றிய கனவும்
ஒன்றே ஆகும். எனவே, அஞ்சிய உள்ளத்தோடு இதனை மெய்யென்று
எண்ணினால், இது அறிவுடைமை ஆகுமோ?" என்று சூசை விளக்கங் கூறி
முடித்தான்.
16 |
நோயுடை யிருகண்
வெய்யோ
னோக்கிலா மூடிற் றென்னத்
தாயுடை யன்பிற் சூசை
தந்தநூ லுளத்திற் கொள்ளா
தீயுடை வெகுளி பொங்கச்
சீறிய சுரமி சாய்ந்து
போயுடை வஞ்ச முள்ளிப்
புகைந்தநெஞ் சாற்றா ளன்றோ. |
|
நோய் உடை
இரு கண் வெய்யோன் நோக்கு இலா மூடிற்று
என்ன,
தாய் உடை அன்பின் சூசை தந்த நூல் உளத்தில் கொள்ளா,
தீ உடை வெகுளி பொங்கச் சீறிய சுரமி சாய்ந்து
போய், உடை வஞ்சம் உள்ளிப் புகைந்த நெஞ்சு ஆற்றாள்
அன்றோ.
|
|