| 42 |
வீங்கிய
துயரிற் சோர்ந்து
வீழுளி
சுரமி கையாற்
றாங்கிய சுடர்செய் வேலோன்
றழுவினா
னுறுதி சொன்னா
னேங்கிய வுளத்திற் றேற
விரவல
ரீனர் நால்வர்
நீங்கிய தன்மைத் தென்னை
நீயழு
தயர்வா யென்றான். |
| |
|
வீங்கிய துயரில்
சோர்ந்து வீழ்உளி சுரமி, கையால்
தாங்கிய சுடர் செய் வேலோன் தழுவினான்; உறுதி சொன்னான்;
ஏங்கிய உளத்தில் தேற, "இரவலர் ஈனர் நால்வர்
நீங்கிய தன்மைத்து என்னை தீ அழுது அயர்வாய்?" என்றான்.
|
பெருகிய
துயரினால் சோர்ந்து சுரமி விழுந்தபோது, அவளைத் தன்
கையால் தாங்கிக்கொண்ட ஒளி வீசும் வேலை உடையவனாகிய நாவகன்
தழுவிக்கொண்டு உறுதி சொன்னான்; ஏங்கிய உள்ளம் தேறுமாறு,
"பிச்சைக்காரர் நீசர் நாலு பேர் நம் சமயத்தை விட்டு நீங்கியதற்காக நீ ஏன்
அழுதுசோர்வாய்?" என்றான்.
| 43 |
பூமனு முணர்விற்
றேர்ந்த
புரட்டனுஞ்
செல்வத் தோங்குந்
தாமனுஞ் சிரீத்தன் றானுந்
தரும்புகழ்
கடந்த வீர
வாமனும் பலருஞ் சேர்ந்து
மாரிநாள்
வெள்ள மொத்தார்
காமனு மெஞ்சப் பைம்பூங்
கவினலோ
யென்று சொன்னாள் |
| |
"பூமனும், உணர்வில்
தேர்ந்த புரட்டனும், செல்வத்து ஓங்கும்
தாமனும், சிரீத்தன் தானும், தரும் புகழ் கடந்த வீர
வாமனும், பலரும் சேர்ந்து மாரி நாள் வெள்ளம் ஒத்தார்,
காமனும் எஞ்சப் பைம் பூங் கவின் நலோய்! என்று சொன்னாள்: |
|