|
அது
கேட்ட சுரமி நாவகனை நோக்கி, "மன்மதனும் குறைபடுமாறு
பசுமையான பூவைப் போன்ற அழகுள்ள நல்லவனே, பூமனும், அறிவில்
தேர்ந்த புரட்டனும், செல்வத்தில் உயர்ந்த தாமனும், சிரீத்தன் என்பவனும்,
தகுந்த புகழில் பிறரையெல்லாம் வென்ற வாமனும், வேறு பலருமாகச்
சேர்ந்து நம் சமயத்தைவிட்டு நீங்கியவர் மழை நாள் வெள்ளத்தை
ஒத்துள்ளார்" என்று சொன்னாள்:
நம்
சமயத்தை விட்டவர் 'நால்வர்' என்ற தன்மையாய்ச் சிலருமல்லர்;
'இரவலர், ஈனர்' என்று சொல்லத்தக்க இழிந்த வருமல்லர்ச் சிறப்பு வாய்ந்த
பெருந்தொகையினர் என்பதைச் சுரமி நாவகனுக்கும் தெரிந்த சிலர்
பெயரைச் சுட்டி இவ்வாறு தெளிவுபடுத்துகிறாள்; மேலும் தொடர்ந்து
சொல்கிறாள்.
| 44 |
துஞ்சிய
கனவிற் றெய்வந்
துயர்முதிர்ந்
தெஞ்சித் தோன்றி
யஞ்சிய வென்னை நோக்கி
யனைவருந்
தன்னை நீத்து
விஞ்சிய மாயை யீர்தல்
வேண்டுமென்
றிரங்கிச் சொல்ல
வெஞ்சிய பின்னர் நின்னை
யெண்ணியுட்
டேறி னேனே |
| |
"துஞ்சிய கனவில்
தெய்வம் துயர் முதிர்ந்து எஞ்சித் தோன்றி,
அஞ்சிய என்னை நோக்கி, அனைவரும் தன்னை நீத்து
விஞ்சிய மாயை ஈர்தல் வேண்டும் என்று இரங்கிச் சொல்ல,
எஞ்சிய பின்னர், நின்னை எண்ணி உள் தேறினேனே. |
"தூக்கத்தினிடையே
என் கனவில் நம் தெய்வம் துயரம் முதிர்ந்து
தளர்ந்து தோன்றி, அது கண்டு அஞ்சிய என்னை நோக்கி, எல்லோரும்
தன்னை விட்டு நீங்குமாறு மிஞ்சி நின்ற மாயையை அறுத்தெறிய
வேண்டுமென்று இரங்கிச் சொல்ல, நான் முதலில் தளர்ந்த பின், உன்னை
நினைந்து உள்ளம் தேறினேன்.
|