பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 412

          45
பொன்வள ருலகத் தேவர்
     பொருந்தியீங் குனக்குத் தந்த
மின்வளர் மணியும் பொன்னும்
     வீரமும் புகழும் யாவுங்
கொன்வளர் செல்வ மாகக்
     கொடுத்ததோ கொடுத்த தேவர்க்
கின்வள ருதவி யாக
     வியற்றிலே வேண்டு மின்றே.
 
"பொன்வளர் உலகத் தேவர் பொருந்தி ஈங்கு உனக்குத் தந்த
மின் வளர் மணியும் பொன்னும் வீரமும் புகழும் யாவும்
கொன் வளர் செல்வமாகக் கொடுத்ததோ? கொடுத்த தேவர்க்கு
இன் வளர் உதவியாக இயற்றலே வேண்டும் இன்றே.

     "பொன் வளரும் விண்ணுலகத் தேவர்கள் பொருந்தி இவ்வுலகில்
உனக்குத் தந்துள்ள ஒளிமிகுந்த மாணிக்கமும் பொன்னும் வீரமும் புகழும்
மற்ற யாவும் வீணே வளரும் செல்வமாகத் கொடுத்ததோ? இவற்றையெல்லாம்
கொடுத்த தேவர்களுக்கு இன்பம் வளரச் செய்யும் உதவியாக இதனை நீ
இப்பொழுதே செய்தல் வேண்டும்.

 
          46
நூல்வழி போதல் வேண்டா
     நுண்மதி முனிவன் வெல்வான்
வேல்வழி குருதி பாய
     வேந்தனே வெருளி காட்டிற்
கால்வழி தழைக ளென்னக்
     கலங்கிய வெவரு மீண்டு
கோல்வழி வில்லோய் தேவர்
     கொண்டவெம் பகையைத் தீர்ப்பாய்.
 
"நூல் வழி போதல் வேண்டா; நுண் மதி முனிவன் வெல்வான்.
வேல் வழி குருதி பாய வேந்தனே வெகுளி காட்டின்,
கால் வழி தழைகள் என்ன, கலங்கிய எவரும் மீண்டு,
கோல் வழி வில்லோய், தேவர் கொண்ட வெம் பகையைத் தீர்ப்பாய்.