|
"அம்பு
வழிகின்ற வில்லை உடையவனே, நூலை ஆதாரம் காட்டிப்
பேசப் போதல் வேண்டாம்; போனால், நுண்ணறிவு கொண்ட முனிவன்
உன்னை வென்று விடுவான். வேலின் மூலமாக இரத்தம் பாய மன்னன் தன்
சினத்தைக் காட்டினால், காற்றின் வழி பார்த்து இலைகள் சாய்வது போல்,
கலங்கிய யாவரும் பழைய வேதத்திற்கே மீண்டு வர, அதன் மூலம்
தேவர்கள் கொண்ட கொடிய பகையை நீ தீர்த்து விடுவாய்.
| 47 |
பண்முழு திறைஞ்சு
நின்சொல்
பார்த்திபன்
மறுக்கல் செய்யான்
மண்முழு தயிலாற் காத்தாய்
வளங்கொளிம்
மறையு நீத்தால்
விண்முழு தின்று காப்பாய்
வேண்டுமே
லரிதொன் றின்றி
யுண்முழு துணர்ந்த தன்மை
யொல்லுமென்றி
றிறைஞ்சி னாளே. |
| |
"பண் முழுது இறைஞ்சும்
நின் சொல் பார்த்திபன் மறுக்கல் செய்யான்.
மண் முழுது அயிலால் காத்தாய்; வளம் கொள் இம் மறையும் நீத்தால்
விண் முழுது இன்று காப்பாய். வேண்டுமேல், அரிது ஒன்று இன்றி,
உள் முழுது உணர்ந்த தன்மை ஒல்லும்" என்று இறைஞ்சினாளே. |
"இசை
வகைகளெல்லாம் தோற்று வணங்கும் உன் சொல்லை அரசன்
மறுக்க மாட்டான். இம் மண்ணுலகம் முழுவதையும் வேலால் நீ காத்தாய்;
வளம் பெற்றுப் பரவி வரும் இவ்வேதத்தை நீ விலக்கி விட்டால்,
விண்ணுலகம் முழுவதையுமே இன்று காத்தவன் ஆவாய். வேண்டுமென்று
நீ மனம் வைத்தால், அரியது என்று ஒன்றிற்கு இடமில்லாமல், உள்ளத்தில்
உணர்ந்த தன்மைப் படியே முழுதும் முடிக்க இயலும்" என்று சுரமி முடித்து,
நாவனை வணங்கினாள்.
அரசன்
மறுக்க மாட்டானாதலின், அவனைக் கொண்டோ, அவன்
இசைவு பெற்றோ இதனைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.
|