பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 414

           48
தொன்னெறி வாம னீக்கிச்
     சூசையாங் குணர்த்து மோதி
நன்னெறி யாகக் கொண்ட
     நவத்தொடு பலவு மோர்ந்தே
யுன்னெறி போதி யெந்தா
     யுவப்பநீ செய்வே னென்னச்
சென்னெறி யசனி யொத்தான்
     சிந்தையிற் பொங்கு கின்றான்.
 
தொல் நெறி வாமன் நீக்கிச் சூசை ஆங்கு உணர்த்தும் ஒதி
நல் நெறியாகக் கொண்ட நவத்தொடு பலவும் ஓர்ந்தே,
உன் நெறி போதி, எம் தாய்! உவப்ப நீ செய்வேன்" என்ன
செல் நெறி அசனி ஒத்தான் சிந்தையில் பொங்குகின்றான்.

     வாமன் தன் பழைய சமய நெறியைக் கைவிட்டுச் சூசை அங்கு
உணர்த்தும் உபதேசத்தை நல்ல நெறியாகக் கொண்டான் என்ற
புதுமையோடு பலவற்றையும் ஆராய்ந்து பார்த்து, "எமக்கெல்லாம் தாய்
போன்றவளே, நீ உன் வழியே மீண்டு போவாயாக. நீ மகிழுமாறு எல்லாம்
செய்வேன்" என்று சுரமிக்குச் சொல்லி, விடை கொடுத்து, மேகத்தில்
தோன்றும் இடியை ஒத்த நாவகன் தன் உள்ளத்தில் சினங்கொண்டு
பொங்குகின்றான்.

                  குண்ணன் குறுக்கீடு

     - மா, - - காய், - மா, - மா, - - காய்

 
              49
கள்ளார் மலர்மணமோ
     கனலார் புகையோ கடுத்தொருவ
னுள்ளார் வினைமுகமே
     லுருவுந் தன்மைத் தவனுணர்ந்த
வெள்ளார் வினையிருகட்
     படமேற் கண்டா னிவன்றாதை
கொள்ளா ராறிருபத்
     தாண்டாய்க் குன்றாக் குண்ணனென்பான்.