கள் ஆர் மலர்
மணமோ கனல் ஆர் புகையோ, கடுத்து ஒருவன்
உள் ஆர் வினை முக மேல் உருவும் தன்மைத்து, அவன் உணர்ந்த
எள் ஆர் வினை இரு கண் படம் மேல் கண்டான் இவன் தாதை,
கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய்க் குன்றாக் குண்ணன்
என்பான்.
|
தேன்
நிறைந்த மலர் உள்ளதை அதன் மணமும் நெருப்பு இருப்பதை
வெளிப்படுத்தும் நிறைந்த புகையும் காட்டும்; அதுபோல், ஒருவன் மனம்
உணர்வு மிகுந்ததனால் உள்ளத்தில் கருதிய செயல் தன் முகத்தின் மேல்
வெளிப்படத் தோன்றும். அத்தன்மையாய், இந்நாவகன் உள்ளத்தில் கருதிய
இகழ்ச்சி நிறைந்த செயலை இவண் தந்தையாகிய குண்ணன் என்பவன்
தனது இரண்டு கண்களின் மேல் படமாகப் பதியக் கண்டான். அவன்
நூற்றிருபது ஆண்டாய்த் தன் வயது நிறைந்தும் மெலியாத தன்மை
உடையவன்.
ஆறிருபத்து
- 6 x 2 x 10 = 120; அல்லது 6 x 20 = 120. "அடுத்தது
காட்டும் பளிங்குபோல் நெஞ்சம், கடுத்தது காட்டும் முகம்" என்ற குறள்
(706) ஒப்பு நோக்கத் தக்கது.
| 50 |
பால்செய்
கடற்கிடந்து
நுரைசூழ்
பவளக் கட்டையெனக்
கால்செய் நரைமூத்தோன்
வெண்டூய்
கலைப்பூந் தவிசெழுந்து
நூல்செய் புலமிக்கோ
னுனித்த
வன்பி னோன்றீன்ற
வேல்செய் திறநம்பி
வினைகண்
டற்க வெனவிளித்தான். |
| |
|
பால் செய்
கடல் கிடந்து நுரை சூழ் பவளக் கட்டை எனக்
கால் செய் நரை மூத்தோன் வெண் தூய் கலைப் பூந் தவிசு எழுந்து,
நூல் செய் புலம் மிக்கோன் நுனித்த அன்பின் நோன்று ஈன்ற
வேல் செய் திற நம்பி வினை கண்டு, "அற்க!" என விளித்தான்.
|
|