|
தீட்டிய
மையின் அழகைத் தன் கண் காணாது பிறரே காண்பது
போல், தன் குற்றமும் தனக்குத் தெளிவாகத் தெரியாமல், பிறருக்கே
தெளிவாகப் புலப்படும்.
'தன்
செயிர் ஆர் காண்பார்' என்ற விடத்து, 'தன் செயிர்' என்று
தனிமைப் படுத்தியும், 'ஆர் காண்பார்' எனப் பொதுமைப்படுத்தியும்
கூறியதாகக் கொள்க. உரைமோ - 'மோ' முன்னிலையசை.
| 52 |
இடக்கைத்
தொகுவிரலா
லெதிர்தோ
ளிட்ட வளைகல்வித்
தடக்கை விரலால்வாய்
புதையாச்
சாற்று தடிகளென
நுடக்கை முதிர்சுரமி
நுவன்ற
தெல்லா நுவன்றிருதாட்
படக்கை தொழுதினிச்செய்
பணியே
பணிப்ப வெனநின்றான். |
| |
இடக் கைத் தொகு
விரலால் எதிர் தோள் இட்ட வளைகவ்வி,
தடக் கை விரலால் வாய் புதையா, "சாற்றுது, அடிகள்!" என,
நுடக்கை முதிர் சுரமி நுவன்றது எல்லாம் நுவன்று, இரு தாள்
படக் கை தொழுது, "இனிச் செய் பணியே பணிப்ப!" என நின்றான். |
நாவகன்
தன் இடக்கையின் முழுத் தொகை விரல்களால் தனது
எதிர்த் தோளில் இட்ட தோள்வளையைப் பற்றிக் கொண்டு, பெருமையுள்ள
வலக் கை விரல்களால் தன் வாயைப் பொத்திக் கொண்டு, "சொல்லுவேன்,
அடிகளே!" எனத் தொடங்கி, உடல் துவளுதலைக் கொண்ட முதிர்ந்த சுரமி
சொல்லியதெல்லாம் எடுத்துச் சொல்லி, தந்தையின் இரு கால்களிலும்
கைபடுமாறு தொழுது, "இனிமேல் நான் செய்ய வேண்டிய பணியைக்
கட்டளையிடுக!" என்றான்.
தடக்
கை - தடம் = பெருமை. பெருமை உடையதாதலின், வலக்கை
'தடக்கை' எனப்பட்டது. புதையா - 'செய்யா' என்னும் வாய்ப்பாட்டு
உடன்பாட்டு வினையெச்சம்; 'புதைத்து' எனப்பொருள்பட்டது. நுடக்கை -
'நுடங்கல்' என்ற தொழிற் பெயரின் மாற்று வடிவம்.
|