பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 418

         53
ஈங்கு நீயுரைமோ
     வுணர்ந்த தென்றாற் கிளையோன்மற்
றோங்கு தேவர்பழி
     யென்ன வேந்தற் குரைத்துநவத்
தீங்கு கொய்தனல
     தென்றா னணைமேற் சேர்த்திருத்தி
வீங்கு கேள்வி நலோன்
     மெலியாத் தீஞ்சொல் விரித்துரைத்தான்.
 
"ஈங்கு நீ உரைமோ உணர்ந்தது" என்றாற்கு, இளையோன்,
"மற்று ஓங்கு தேவர் பழி என்ன வேந்தற்கு உரைத்து, நவத்
தீங்கு கொய்தல் நலது" என்றான். அணை மேல் சேர்த்து இருத்தி
வீங்கு கேள்வி நலோன் மெலியாத் தீம் சொல் விரித்து உரைத்தான்:

     குண்ணன் அவனை நோக்கி, "இங்கு நீ செய்யக் கருதியதைச் சொல்"
என்றான். இளையோனாகிய நாவகன், "உயர்ந்த நம் தேவர்களுக்கு ஏற்பட்ட
இகழ்ச்சி என்று அரசனுக்குச் சொல்லி, புதிதாய் முளைத்த இத்தீங்கை
அறுத்துக் களைதல் நல்லது" என்றான் பெருகிய கேள்வியறிவு படைத்த
நல்லவனாகிய குண்ணன் அவனை மெத்தை மேல் தன்னோடு சேர்த்து
இருத்திக் கொண்டு, குறைபடாத இனிய சொல்லை விரித்து உரைத்தான்:

     உரைமோ-'மோ' முன்னிலை அசை. நலது-'நல்லது என்பதன்
இடைக்குறை.

 
        54
விள்ளா வரும்பொப்ப
     விளை நன் னாகின் வேற்கடன்முன்
னெள்ளா விற்றலைவ
     னியூதர் நாட்டி லிருந்தேனா
னள்ளா மதிதாழ்ந்தா
     னைய வாங்கந் நாளருகே
யுள்ளா வயத்துற்ற
     துரைப்பப் போற்றி யுணர்கென்றான்.