பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 420

     'ஒருவன் இருந்தான்' எனப் பொருள் முடிவிற்கு இரு சொல் வருவித்து
உரைக்க.

 
                   56
மாற்றர சினமெலாம் வணங்கும் வாகையான்
வேற்றர சினமுடி விளக்குந் தாளினா
னேற்றர சினங்கொண ரிறைகொள் கையினா
னாற்றர சினமெலா நடுக்கு மாணையான்.
 
மாற்று அரசு இனம் எலாம் வணங்கும் வாகையான்;
வேற்று அரசு இனம் முடி விளக்கும் தாளினான்;
ஏற்று, அரசு இனம் கொணர் இறை கொள் கையினான்;
ஆற்று அரசு இனம் எலாம் நடுக்கும் ஆணையான்.

     சினக்கரன் என்னும் அவ்வரசன் பகையரசர் கூட்டமெல்லாம்
வணங்கும் வெற்றியை உடையவன்; வேற்றரசர் கூட்டத்தின் முடிகள்
பணிவதனால் ஒளிர்விக்கும் கால்களை உடையவன்; தன் தலைமையை
ஏற்று, பிற அரசர் கூட்டம் கொணரும் கப்பத்தைப் பெற்றுக் கொள்ளும்
கையை உடைவவன்; தனக்கு ஈடு கொடுக்கக்கூடிய அரசர் கூட்டமெல்லாம்
எப்போதும் நடுங்கிக்கொண்டிருக்கச்செய்யும் ஆணையை உடையவன்.

     மாற்றரசு - மாறு + அரசு எனவும், வேற்றரசு - வேறு + அரசு
எனவும் கொள்க.

 
               57
ஓடைமால் மதகரி யுயர்த்த வாகையான்
கோடைநா ளசனியைக் குழைத்த வில்லினான்
பாடையா யிகலுரம் பழக்கும் வாளினான்
வாடையால் வருவிசை வாட்டுந் தேரினான்.
 
ஓடை மால் மத கரி உயர்த்த வாகையான்;
கோடை நாள் அசனியைக் குழைத்த வில்லினான்;
பாடையாய் இகல் உரம் பழக்கும் வாளினான்;
வாடையால் வரு விசை வாட்டும் தேரினான்.

     அவன் நெற்றிப் பட்டம் அணிந்து மத மயக்கம் கொண்ட யானை
உருவம் தீட்டி உயர்த்திய கொடியை உடையவன்; கோடை காலத்து
இடியையும் குழையச் செய்யும் வில்லை உடையவன்; பகைவர் மார்பைச்