|
சாணைக்கல்லாகக்
கொண்டு தீட்டும் வாளை உடையவன்; வாடைக்
காற்றினிடம் காணும் வேகத்தையும் தோற்கடிக்கும் தேரை உடையவன்.
வில்லுக்கு,
இடியை வெல்லும் ஓசை அதன் நாணை இழுத்து
விடுவதனால் ஏற்படுவது.
| 58 |
ஆலமு மழலும்விட்
டதட்டிச் சீறினால்
ஞாலமு நடுக்கிய நச்சுக் கண்ணினான்
மாலமு மறலியும் வஞ் மாலையுஞ்
சீலமொன் றிலதவை செறிந்த நெஞ்சினான். |
| |
ஆலமும் அழலும்
விட்டு, அதட்டிச் சீறினால்
ஞாலமும் நடுக்கிய நச்சுக் கண்ணினான்;
மாலமும் மறலியும் வஞ்ச மாலையும்,
சீலம் ஒன்று இலது, அவை செறிந்த நெஞ்சினான். |
அவன்
இயல்பாகவே நஞ்சையும் நெருப்பையும் பொழியவிட்டு,
அதட்டிச் சீறினால் உலகமெல்லாம் நடுங்கச் செய்யும் நஞ்சுக் கண்ணை
உடையவன்; ஒழுக்கம் என்னும் ஒன்று அறவே இல்லாது, பேயும் எமனும்
வஞ்சகம் என்னும் மாலையும் ஆகிய அவை செறிந்து கிடக்கும் நெஞ்சை
உடையவன்.
| 59 |
அருளிடு மொழிமறுத்
தழன்ற வாயினான்
வெருளிடு பொய்ப்பொருள் விழுங்குங் காதினான்
பொருளிடு முடியொடு புன்கண் பூத்தவர்
திரளிடு முறையெலாஞ் சுமந்த சென்னியான். |
| |
அருள் இடு மொழி
மறுத்து, அழன்ற வாயினான்;
வெருள் இடு பொய்ப் பொருள் விழுங்கும் காதினான்;
பொருள் இடு முடியொடு, புன்கண் பூத்தவர்
திரள் இடு முறை எலாம் சுமந்த சென்னியான். |
அருள்
பொருந்திய சொற்களை விலக்கி, சுடுசொற்களால் எரிந்த
வாயை உடையவன்; அச்சத்தால் வெளிப்படும் பொய்ப் பொருளாகிய
புகழுரைகளை மெய்ப் பொருளென்று உட்கொள்ளும் செவியை உடையவன்;
பொன்னால் ஆகிய முடியோடு, தன்னால் துன்பத்திற்கு ஆளானவர் கூட்டம்
சொல்லும் முறையீடுகள் யாவற்றையும் தாங்கி கொண்ட தலையை
உடையவன்.
|