| 60 |
ஆற்றுநீ
ரலையினீ ரலந்தை நீரெலாஞ்
சேற்றுநீ ருவர்குழை வெனச்செ குத்தவ
னாற்றுநீ ரிலசல மாற்றி லார்விழி
யூற்றுநீ ரொன்றினை யுவப் பென்றாடுவான். |
| |
ஆற்று நீர் அலையின்
நீர் அலந்தை நீர் எலாம்
சேற்று நீர் உவர் குழைவு எனச் செகுத்து, அவன்
ஆற்றும் நீர் இல சலம் ஆற்று இலார் விழி
ஊற்றும் நீர் ஒன்றினை உவப்பு என்று ஆடுவான். |
அவன்
ஆற்றுநீர் சேறுள்ள நீர், கடல் நீர் உப்புள்ளது, குளத்து நீர்
குழைவு உள்ளது என்று எல்லா வகை நீரையும் விலக்குவான்; தான் செய்யும்
நேர்மை இல்லாத வஞ்சகத்தைப் பொறுக்க இயலாதவரின் கண்கள்
பொழியும் நீர் ஒன்றே தனக்கு மகிழ்ச்சி தருவதென்று அதனில் நீராடுவான்.
'விழி
ஊற்று நீர்' என்று கொண்டு, 'கண்ணாகிய ஊற்றினின்று
பிறக்கும் நீர்' என உரைத்தலும் ஒன்று.
| 61 |
கின்னரம்
பயிலியாழ் கிளர்பொன் மாடக
வின்னரம் புளரலு மினிதன் றென்றுதன்
வின்னரம் பொலிக்கனை வினையிற் கைமையார்
துன்னரம் பயிலொலி சுவையென் றாவுவான். |
| |
கின்னரம் பயில்
யாழ் கிளர் பொன் மாடக
இன்நரம்பு உளரலும் இனிது அன்று என்று, தன்
வில் நரம்பு ஒலிக் கணை வினையின் கைமையார்
துன்னரம் பயில் ஒலி சுவை என்று ஆவுவான். |
கின்னரம்
பழகிய யாழ், அழகிய பொன் முறுக்காணி கொண்ட
வீணை ஆகியவற்றின் இனியநரம்புகளைத் தடவி வாசித்தலும் இனிமை
தருவதன்று என்று கொள்வான்; தன் வில்லின் நாண் ஒலிக்கப் பாயும்
அம்பின் செயலால் விதவையான மகளிர் ஒப்பாரியில் எழுப்பும் ஒலி
சுவையானதென்று அதனையே விரும்புவான்.
கின்னரம்,
யாழ், வீணை - இவை யாழின் வகைகள் என்று கொள்க
பயில் + யாழ் - பயிலியாழ்: தன்னொழிமெய் முன்யகரம் வர இகரம் தோன்றிற்று.
|