| 62 |
கோதிலார்
தனக்குவேற் றென்று கூட்டிலான்
றீதுளார் தனக்கெதி ரென்று சேர்க்கிலா
னேதினா லிணையிலா னெதிர்ந்தி யாரையும்
பேதிலாமறத்தொடு பகைக்கும் பெற்றியான். |
| |
கோது இலார்
தனக்கு வேற்று என்று கூட்டிலான்;
தீது உளார் தனக்கு எதிர் என்று சேர்க்கிலான்;
ஏதினால் இணை இலான்; எதிர்ந்து, யாரையும்
பேதுஇலா மறத்தொடு பகைக்கும் பெற்றியான். |
குற்றம்
இல்லாத நல்லோர் தன்னினின்று வேறுபட்டவரென்று
அவரைத் தன்னோடு கூட்டிக் கொள்ளான்; குற்றம் உள்ளவர்,
ஒத்தவராதலின், தனக்கு எதிரானவ ரென்று சேர்த்துக் கொள்ள மாட்டான்;
தீமையில் தனக்கு ஒப்பு எவரும் இல்லாதவன்; வலியப் போய் யாரையும்
வேறுபாடு இல்லாத சினத்தோடு பகைத்துக் கொள்ளும் இயல்பு படைத்தவன்.
எதிர்ந்து
+ யாரையும் - எதிர்ந்தியாரையும்: யகரம் வரக்
குற்றியலுகரம் இகரமாயிற்று.
| 63 |
அத்திறத்
தாயினா னரசர் யாரையு
மொய்த்திறத் தடக்குபு முதிர்ந்த வேதநூன்
மெய்த்திறத் தியூதர்சீர் விளைந்த நாட்டுறீஇப்
பொய்த்திறத் தருஞ்செய முணர்ந்து போயினான். |
| |
அத்திறத்து ஆயினான்
அரசர் யாரையும்
மொய்த் திறத்து அடக்குபு, முதிர்ந்த வேத நூல்
மெய்த் திறத்து யூதர் சீர் விளைந்த நாட்டு உறீஇப்
பொய்த் திறத்து அருஞ் செயம் உணர்ந்து போயினான். |
அத்தகைய
இயல்பு படைத்த சினக்கரன் அரசர் எல்லோரையும் தன்
வலிமைத் திறத்தினால் அடக்கி, பழமையான வேத நூலின் வழி வரும்
உண்மையான வலிமை படைத்த யூதரது சிறப்புப் பொருந்திய நாட்டை
அடைந்து தன் பொய்யான வலிமையால் அரிய வெற்றியைப் பெறலா மென
நினைந்து போனான்.
|