|
கரு
மேகத்தில் தோன்றும் இடி போன்ற மொழியால் சினத்தோடு,
யூதர் தம் சிறப்புப் பொருந்திய வேதத்தின் நலத்தை அழித்து வந்து, நீரில்
தோன்றும் தாமரை மலர் போன்ற தன் அடியைப் பணிய இசைதல்
இல்லையேல், போர் விளையும் என்ற சுடு சொல்லைத் தூதுவன் மூலம்
அனுப்பினான்.
மரை
- முதற் குறையாகத் தாமரையைக் காட்டிற்று; முதலாகு பெயராக
மலர்க்கு ஆயது.
-
- காய், - - காய், - - காய், - - காய்
| 66 |
கோனலமுங்
குலநலமுங் குலத்துரிய தொற்சுருதி
நூனலமு மவர்தொழுத நுனித்தவொரு நாயகன்றன்
வானலமு மொன்றெண்ணா வரைவறுந்தன் கடறானை
வேனலமொன் றூன்றியசொல் வெடித்தான்றூ துரைகொண்டான், |
| |
கோன் நலமும்
குல நலமும் குலத்து உரிய தொல் சுருதி
நூல் நலமும் அவர் தொழுத நுனித்த ஒரு நாயகன் தன்
வான் நலமும் ஒன்று எண்ணா, வரைவு அறும் தன் கடல்தானை
வேல் நலம் ஒன்று ஊன்றிய சொல் வெடித்தான் தூது
உரைகொண்டான். |
சினக்கரனின்
தூது மொழியைக் கொண்டு வந்த தூதன் யூதர்
மன்னனின் நலமும், அவனது குல நலமும், யூதர் குலத்துக்கு உரிய பழைய
வேத நூலின் நலமும், அவர்கள் தொழுது வந்த நுட்பமான ஓர் இறைவனின்
மாண்பு நலமும் என்று இவை ஒன்றையும் மதிக்கவில்லை. எல்லையற்ற தன்
கடல் போன்ற சேனையின் வேல் நலம் ஒன்றின்மீதே ஊன்றி நின்ற
சொல்லை வெடித்துச் சொன்னான்.
| 67 |
தீய்முகத்துப்
பொங்கியபால் தெண்ணீரிட் டாற்றுவர்போல்
வீய்முகத்துச் சுடுஞ்சொல்லான் விளைத்திட்ட வெம்வெகுளி
காய்முகத்துக் கோனுணர்ந்த கருணையீனீர் கொண்டாற்றி
யாய்முகத்துத் தேறியயிர்ப் பறவீர வுரைவலித்தான். |
|