தீய் முகத்துப்
பொங்கிய பால் தெள் நீர் இட்டு ஆற்றுவர் போல்,
வீய் முகத்துச் சுடுஞ்சொல்லான் விளைத்திட்ட வெம் வெகுளி
காய் முகத்துக் கோன் உணர்ந்த கருணையின் நீர் கொண்டு ஆற்றி,
ஆய் முகத்துத் தேறி அயிர்ப்பு அற, ஈர உரை வலித்தான். |
நெருப்பின்
காரணமாகப் பொங்கிய பாலைத் தெளிந்த
நீரைத்தெளித்துத் தணிப்பர். அதுபோல, தான் சாவதற்குக் காரணமான சுடு
சொல்லைப் பேசிய அத்தூதன் விளைவித்த கொடிய சினம் வாட்டிய
இடத்தும், அரசன் நல்லதென்று தான் உணர்ந்த கருணை என்னும் நீரைக்
கொண்டு தணிவித்தான்; ஆராய்ந்து பார்த்தவிடத்து அத்தூதன் தெளிந்து
தன் வீரத்தைப் பற்றி ஐயம் கொள்ளுதற்கு இடமில்லாத வகையில், அன்பு
கலந்த உரையைக் கருதிச் சொன்னான்.
அரசன்
தன் வீரமும் வெளிப்படும் வண்ணம் ஈரம் கலந்த உரையைச்
சொன்னான். 'வீரம்' என்று பிரித்துப் பொருள் கொள்ளுதல் சிறப்பின்று
என்க. தீ, வீ என்பன எதுகை பற்றி விரித்தல் விகாரமாக யகர மெய்
பெற்றன.
| 68 |
உன்னல்லா
லிவ்வுரைசெய் துய்வாரா ருன்னரச
னென்னல்லா லென்னிறைவ னிகன்றனபின் னென்னிறைவன்
றன்னல்லால் விடையிங்கட் சாற்றுவாரார் சடுதிப்போய்
வின்னல்லா யிம்மொழியை விளம்பென்றான் மறைக்கோமான். |
| |
"உன் அல்லால்,
இவ் உரை செய்து உய்வார் ஆர்? உன் அரசன்
என் அல்லால், என் இறைவன் இகன்றன பின், என் இறைவன்
தன் அல்லால் விடை இங்கண் சாற்றுவர் ஆர்? சடுதிப் போய்,
வில் நல்லாய், இம் மொழியை விளம்பு" என்றான் மறைக் கோமான். |
வேத
நெறி தழுவிய அரசன் தூதனை நோக்கி. "வில்தொழிலில்
நல்லவனே, இவ்வாறு பேசி உயிர் தப்புவார் தூதனாகிய உன்னையல்லாமல்
வேறு யார் உளர்? உன் அரசன் என்னைப் பகைத்ததும் அல்லாமல், என்
|