பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 427

ஆண்டவனையும் பகைத்த பின், இங்கு அவனுக்கு விடை சொல்லக்கூடியவர்
என் இறைவனையல்லாமல் வேறு யார் உள்ளார்? நீ விரைந்து போய் இம்
மொழியை உன் மன்னனுக்குச் சொல்" என்றான்.

     சொல்லில் வல்லவனாய் இருத்தல் தூதனுக்கு அழகு அவனை, 'வில்
நல்லாய்,' என்றது மறைமுகப் பழிப்பு. 'இவ்வுரை' என்று குறித்தது தெய்வ
நிந்தையும் அரசநிந்தையும் என்பது அடுத்த பாடலால் தெளிவுபெறும்.
இப்பாடல் மன்னனின் ஈர உரையைக் காட்டி நின்றது.

 
                               69
பாரிறைஞ்சுந் தேவர்களெம் படைத்திறத்துத் துஞ்சினரோ
நீரிரைஞ்சுந் தேவன்வலி மிக்கதுகொல் நெடிதெங்கும்
போரிரைஞ்சும் வேல்வேந்தன் புகைந்துகுத்த புண்கணுறா
காரிறைஞ்சு முன்னாட்டைக் காமினென்றான் கடுஞ்சினத்தான்.
 
பார் இறைஞ்சும் தேவர்கள் எம் படைத் திறத்துத் துஞ்சினரோ?
நீர் இறைஞ்சும் தேவன் வலிமிக்கது கொல்? நெடிது எங்கும்
போர் இறைஞ்சும் வேல் வேந்தன் புகைந்து உருத்த புண் கண் உறா,
கார் இறைஞ்சும் உன் நாட்டைக் காமின்" என்றான் கடுஞ்சினத்தான்.

     அது கேட்ட தூதன், கடுஞ்சினங் கொண்டவனாய், "உலகமெல்லாம்
வணங்கும் தேவர்கள் யாம் வென்ற நாடுகளில் எமது படைத்திறத்திற்கு
அஞ்சித் தூங்கிப் போயினரோ? நீங்கள் வணங்கும் தேவனது வலிமை
அத் தேவர்களின் வலிமையைக் காட்டிலும் வலிமை மிகுந்ததோ? போரே
தலை வணங்கும் வேலை உடைய எம் அரசன் சினந்து,
விளைவித்ததுன்பத்தை நீயும் அடையாவண்ணம், மேகங்கள் தாழ்ந்து மழை
பொழியும் உன் நாட்டை அத் தீங்கினின்று காத்துக்கொள்" என்றான்.

 
                        70
துஞ்சினரோ மற்றெவருந் தொழுந்தேவர் நும் படை முன்
னெஞ்சினரோ வறிகிலனா னென்னிறையோன் வலிகுன்றா
விஞ்சினனோ கண்டுணர்க வினைவெம்போர் வேண்டினுநா
னஞ்சினனோ வத்திறத்தின் றமர் கென்றா னறநீரான்.