"துஞ்சினரோ
மற்று எவரும் தொழும் தேவர் நும் படை முன்,
அஞ்சினரோ? அறிகிலன் நான். என் இறையோன் வலி குன்றா
விஞ்சினனோ கண்டுனர்க வினைவெம்போர் வேண்டினும், நான்
அஞ்சினனோ? அத்திறத்து இன்று அமர்க" என்றான் அற நீரான். |
அற
இயல்பு படைத்த யூதர் மன்னன், "வேறு எவரும் தொழும்
தேவர்கள் உங்கள் படைக்கு முன் தூங்கிப் போனார்களோ,
தோற்றார்களோ - அது பற்றி நான் ஒன்றும் அறியேன். என் ஆண்டவன்
வலிமை குன்றாமல் மேம்பட்டு நின்றானோ என்பதைப் போருக்கு வந்து
நீயே கண்டு உணர்வாயாக. கொடிய போர்ச் செயலை நீ விரும்பினாலும்,
நான் அதற்கு அஞ்சி இருந்தேனோ? அம் முறைக்கும் இன்றே
இசைவாயாக" என்றான்.
'அமர்
கென்றான்' என்பது தொகுத்தல் விகாரம்.
| 71 |
அருள்புரிந்த
தூதுரைத்தே னார்ந்தமணி முடிநல்லோய்
மருள்புரிந்த மனத்தெண்ணா மன்னனருண் மறுத்தாயே
வெருள்புரிந்த வெஞ்சினப்போர் வினைநின்பா லென்றிறைஞ்சி
யிருள்புரிந்த விரவிற்சென் றிவையிறைவற் கியம்புகின்றான். |
| |
"அருள் புரிந்த
தூது உரைத்தேன், ஆர்ந்த மணி முடி நல்லோய்!
மருள் புரிந்த மனத்து எண்ணா, மன்னன் அருள் மறுத்தாயே;
வெருள் புரிந்த வெஞ்சினப் போர்வினை நின்பால்" என்று இறைஞ்சி,
இருள் புரிந்த இரவில் சென்று, இவை இறைவற்கு இயம்புகின்றான். |
சினக்கரனின்
தூதன் முடிவாக, "மணிகள் நிறைந்த முடியை அணிந்த
நல்லவனே, உன்பால் கருணை கருதிய தூது மொழியைச் சொன்னேன்.
மயக்கம் நிறைந்த மனத்தில் அதனை எண்ணிப் பாராமல், எம் மன்னனின்
அருளைப் பெற மறுத்துவிட்டாயே; அதனால், கடுஞ்சினத்தால் விளையும்
அச்சம் பொருந்திய போர் நடவடிக்கை உன் மீது அமையும்" என்று
வணங்கி, இருள் நிறைந்த இரவில் திரும்பிச் சென்று, இவற்றையெல்லாம்
தன் மன்னனுக்குக் கூறுகின்றான்.
|