|
இவ்வாறு
அரசன் ஏலியனுக்குச் சொன்னான். அதன் பின்னர் மதம்
பொழியும் யானையின் சீற்றத்தை வென்றவனும் மன்னனது படைக்கு
வலிமை வாய்ந்த தலைவனுமாகிய மலக்கன் என்பான் ஒருவன் அங்கு
நின்றான்; அப்படைத் தலைவனை நோக்கி, அதன்பின்னர், தான் நீதியைப்
புறக்கணித்துச் சொல்லிய செய்தி சென்ற திசைதோறும் எவ்விடத்தும்
அதைக் கேட்டவர் மனம் கூசும்படி, இடிபோல் முழங்கிச் சொன்னான்:
காதை
- கதை இங்கே உணர்த்திற்று. சென்றன - சென்ற' என்ற
பெயரெச்சம் இடையே 'அன்' சாரியை பெற்றது.
| 72 |
பொருந்தலர்
தடிந்தெஞ் ஞான்றும்
புள்ளின
மினிது மாந்த
விருந்தம ரசனி வேலோய்
விரிந்தவென்
னாட்டி லெங்கு
மிருந்தமர் சிறுவர் யாரு
மெவனையு
நீங்கா தொல்லற்
கருந்தமர் பிறரென் றெண்ணா
தடுதியே
சடுதி யென்றான். |
| |
"பொருந்தலர்
தடிந்து எஞ்ஞான்றும் புள் இனம் இனிது மாந்த
விருந்து அமர் அசனி வேலோய், விரிந்த என் நாட்டில் எங்கும்
இருந்து அமர் சிறுவர் யாரும், எவனையும் நீங்காது, ஒல்லற்கு
அருந் தமர் பிறர் என்று எண்ணாது, அடுதியே சடுதி!" என்றான். |
"பகைவரை
வெட்டிப் பறவை இனங்கள் இனிது உண்ணுமாறு எந்நாளும் விருந்தூட்டும் இடிபோன்ற வேலை உடையவனே,
விரிந்து
கிடக்கும் என் நாட்டில் எங்கும் வாழ்ந்திருக்கும் சிறுவர் யாவரையும்,
ஒருவனையும் தப்ப விடாமல், இது செய்ய மனம் பொருந்துவதற்கு அரிய
தம்மவர் எனவும், பிறர் எனவும் வேற்றுமை கருதாமல், விரைந்து
கொல்வாயாக" என்றான் மன்னன்.
'எவனையும்
நீங்காது' என ஆண்பாலால் சொல்லவே, சிறுமியரை
விலக்கியதாயிற்று.
|