| 73
|
|
குன்றிணை
யிணையிற் குன்றக்
குவவிய
தோளி னானு
மின்றிணை யடியைச் சூடி
விரும்பிய
நிலையி னூங்கு
முன்றிணை யெங்கும் வேரோ
டுன்பகை
யொருங்கு தீர்ப்பே
னென்றிணை யறக்காய்ந் தேகி
யெழுந்திறை
கோயில் புக்கான்.
|
| |
குன்று இணை இயையின்
குன்றக் குவவிய தோளினானும்
இன்று இணை அடியைச் சூடி, விரும்பிய நிலையின் ஊங்கும்
உன்திணை எங்கும் வேரோடு உன் பகை ஒருங்கு தீர்ப்பேன்"
என்று, இணை அறக் காய்ந்து ஏகி, எழுந்து இறை கோயில் புக்கான். |
இரண்டு
குன்றுகள் ஒன்றாய்ச் சேரினும் ஒப்பாகாது குறைபடுமாறு
திரண்ட தோளை உடைய அப்படைதலைவனும், "இன்றே, உன்
திருஅடிகளை முடிபட வணங்கி, நீ விரும்பிய நிலைக்கு மேலாகவும் உனது
நாடெங்கும் உன் பகையை ஒன்றாக வேரோடு தீர்த்துக்கட்டுவேன்" என்று,
ஒப்பற்ற முறையில் சினந்து சென்றபின், அரசனும் எழுந்து தன் மாளிகை
புகுந்தான்.
ஏகுதல்
படைத்தலைவன் செயலாகவும் புகுதல் அரசன்
செயலாகவும் கொள்க. 'ஏவி' என்ற வினையெச்சம் 'ஏக' என்ற பொருளில்
நின்றது.
குழந்தைகள்
படுகொலை
-
மா, கூவிளம், - மா, கூவிளம், - மா, கூவிளம், - விளம்
| 74 |
புலக்க
தம்பொதி ரரியி னங்கொடும்
புலியி
னங்கொடி தொலியெழக்
கலக்க மொன்றிய வெறிக டம்பறழ்
கடுகி
வந்துணு கதமெனா |
|