மலக்க
னென்றவ னொடுமு னிந்ததிர்
மறவர்
வெங்குல மருவியாங்
கிலக்க மொன்றில சிறுவர் பொன்றிட
விறைவ
னென்றவை யயர்குவார். |
| |
புலக் கதம் பொதிர்
அரி இனம் கொடும் புலி இனம் கொடிது
ஒலி
எழக்
கலக்கம் ஒன்றிய வெறிகள் தம் பறழ் கடுகி வந்து உணு
கதம்
எனா,
மலக்கன் என்றவனோடு முனிந்து அதிர் மறவர் வெங்குலம் மருவி, ஆங்கு
இலக்கம் ஒன்று இல சிறுவர் பொன்றிட இறைவன் என்றவை
அயர்குவார்.
|
உணர்விடத்துச்
சினம் மிகுந்த சிங்கக் கூட்டமும் கொடிய புலிக்
கூட்டமும் கொடிதாக ஒலியெழுப்பிக் கலக்கமடைந்த ஆட்டுக் குட்டிகளை
விரைந்து வந்து உண்ணும் வெகுளிச் செயலுக்கு ஒத்ததாக, மலக்கன் என்ற
படைத்தலைவனோடு சினந்து முழங்கும் கொடியமறவர் குலத்தும் படை
வீரரும் ஒன்றுகூடி, அங்கு எண்ணிக்கை இல்லாத சிறுவர் மடிய
வேண்டுமென்று மன்னன் இட்ட கட்டளையை நிறைவேற்றத் தொடங்குவர்.
'இறைவன்,
சிறுவர் பொன்றிட என்றவை அயர்குவார்' என மாற்றிக்
கூட்டுக. என்றவை - சொன்னவை என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.
| 75 |
முலைமு
கக்கதிர் தழுவி மொய்த்தன
முகைமு
கப்பல சிறுவரே
யுலைமு கக்கன லெரிக தத்தன
ருவணி
கட்கொடு வொழிதருங்
கொலைமு கத்தொடு குருதி யைத்தொடர்
குழவி
துய்த்துணு மமுதுக
வலைமு கத்தொளி யவிழு முத்தொடு
மருவி
துப்பென மருளுமே. |
|