முலை முகக் கதிர்
தழுவி மொய்த்தன முகை முகப் பல சிறுவரே
உலை முகக் கனல் எரி கதத்தனர் உவணிகள் கொடு ஒழிதரும்
கொலை முகத்தொடு குருதியைத் தொடர் குழவி துய்த்து உணும்
அமுது உக,
அலை முகத்து ஒளி அவிழும் முத்தொடும் அவிரு துப்பு என
மருளுமே. |
தாய்மாரின்
முலைக் காம்பினைப் பற்றித் தழுவிய மொட்டுப்
போன்ற முகமுள்ள பல சிறுவரை அடுப்பிலுள்ள நெருப்பைப் போல் எரியும்
சினங் கொண்ட படை வீரர் வாள்களைக் கொண்டு அறுத்தொழிக்கும்
போது, கொலைப்பட்ட முகத்தோடு அக் குருதியைத் தொடர்ந்து, குழந்தை
சுவைத்து உண்ணும் பாலும் சேர்ந்து சொரிய, கடலிடத்து ஒளி விரியும்
முத்தோடு ஒளிவிடுகின்ற பவளமும் சேர்ந்து கிடப்பதுபோல் கலந்து
கிடக்கும்.
| 76 |
கரமு
மற்றனர் தழுவு கின்றமொய்
கதிரு
மற்றனர் கசடிலா
வுரமு மற்றனர் நிரைது மிந்துட
லுதர
மற்றன ருயிர்படச்
சிரமு மற்றனர் சித வம்பிதழ்
முளரி
யற்றெனச் சிறியதோர்
புரமு மற்றனர் கடிகை யும்பல
புடையி
லற்றுக வெவணுமே. |
| |
கரமும் அற்றனர்;
தழுவுகின்ற மொய் கதிரும் அற்றனர்; கசடு இலா
உரமும் அற்றனர்; நிரை துமிந்து உடல் உதரம் அற்றனர்; உயிர் படச்
சிரமும் அற்றனர்; சிதற வம்பு இதழ் முளரி அற்றெனச் சிறியதோர்
புரமும் அற்றனர், கடிகையும் பல புடையில் அற்று உக எவணுமோ! |
நாட்டில்
பல நாழிகைப் பொழுதாகப் பலவிடத்தும் வெட்டிய
உடல்கள் அறுந்து விழுதலால் எவ்விடத்தும் குழந்தைகள் கைகளும்
இழந்தனர்; தழுவுகின்ற முலையையும் இழந்தனர், கசடு இல்லாத மார்பும்
இழந்தனர்;
|