|
வரிசை வரிசையாக
வெட்டுண்டு உடலும் வயிறும் இழந்தனர்; உயிர் மாயத்
தலையும் இழந்தனர்; வாசனை பொருந்திய இதழ்கள் சிதறத் தாமரை
அறுந்து கிடப்பதுபோல் சிறியதோர் உடற்பகுதியும் முழுமையாக இல்லாமல்
இழந்து போயினர்!
| 77 |
அடாவி
டாதன கொடுமை யார்தரு
கரிய
சேயனை யெனவருள்
விடாவி டாதது தழுவி னாளவன்
வெகுள
மார்பொடு மகவினைக்
கடாவி னானுரு வொருவை வாழ்வழி
கடிதி
லீருயிர் படமதுப்
படாவி ளாமுகை யெழிலொ டோர்கொடி
படுவ
போலவர் விழுவரே. |
| |
அடா! விடாதன
கொடுமையார், ''தருக அரிய சேயனை!'' என,அருள்
விடா விடாது அது தழுவினாள். அவன் வெகுள மார்பொடு
மகவினைக்
கடாவினான்; உருவு ஒரு வை வாள் வழி கடிதில் ஈருயிர் பட, மதுப்
படா விளா முகை எழிலொடு ஓர் கொடி படுவ போல் அவர்
விழுவரே! |
அடாத
செயலை விடாத கொடுமையாளர் ஒரு தாயிடம், ''உனது அருமை மகனைக் கொல்லத் தருவாயாக!''
என்று கேட்டு நிற்க, அவள்
பாசம் விடாதவளாய் அக்குழந்தையைப் பறிக்க விடாமல்
தழுவிக்கொண்டாள். ஒருவன் வெகுண்டு அவள் மார்போடு சேர்த்து
அக்குழந்தை மீது வாளைச் செலுத்தினான். ஊடுருவிச் சென்ற ஒரு
கூர்மையான வாளின் வழியாக இரண்டு உயிர்கள் மடிய, அவ்விருவரும்
தேன் தோன்றாத மலராத மொட்டும் அழகிய ஒரு பூங்கொடியும் தரையிற்
சாய்வதுபோல் விழுந்து கிடப்பர்.
தருக
+ என = தருகவென என வரவேண்டியது 'தருகென' என
நின்றது தொகுத்தல் விகாரம். வை - கூர்மை : உரிச்சொல்.
|