| 78 |
இப்பு
றத்திவள் விடுதி யென்றதி
ழுத்தி
ழுத்தன ளெரிகதத்
தப்பு றத்தவன் விடுதி யென்றதி
ழுத்த
றுத்தன னவள்முகந்
துப்பு றத்தனி மகவு துண்டுது
மித்து
டற்குறை யெறிகுவான்
செப்பு றத்தகு முறைய கன்றசி
னத்த
ழற்றிய நினைவினான். |
| |
இப்புறத்து இவள்,
''விடுதி!'' என்று அது இழுத்து இழுத்தனள். எரி
கதந்து
அப்புறத்து அவன், ''விடுதி!'' என்று அது இழுத்து அறுத்தனன்;
அவள்
முகம்
துப்பு உறத் தனி மகவு துண்டு துமித்து உடற் குறை எறிகுவான்
செப்பு உறத் தகு முறை அகன்ற சினத்து அழற்றிய நினைவினான். |
இப்பக்கம்
ஒரு தாய், ''என் குழந்தையை விடு!'' என்று, அவன்
இழுக்கத் தானும் இழுத்து நின்றாள். எரியும் சினத்தோடு எதிர்ப் பக்கம்
நின்ற அவன், ''குழந்தையைக் கொல்ல என்னிடம் விடு!'' எனது அதனைத்
தன் பக்கம் இழுத்து வாளால் அறுத்தான். தான் கேட்டுத் தராமையால்,
சொல்லத் தக்க அளவு கடந்த சினத்தால் கொதித்த உள்ளத்தவனாய்,
அத்தாயின் முகம் பீறிட்ட குருதியினால் சிவப்பேற அவளது ஒரே மகனைத்
துண்டு துண்டாக வெட்டி, அக் குறையுடலைத் தரையில் எறிவான்.
| 79 |
நஞ்சி
னார்தொழில் கண்ட தாய்மறை
வென்று
நாடினு நாகு கொண்
டஞ்சி னார்தொழில் கண்டி லாமையி
லன்பி
னாலுயிர் பேணிய
நெஞ்சி னாடொழில் கண்டி லாமக
னின்று
நீடழ வேபகை
விஞ்சி னார்தொழில் கொண்டு வாள்வழி
வெம்பு
ணீருக வீவனால். |
|