பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 49

நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு என்று நாடினும், நாகு
                                         கொண்டு
அஞ்சினார் தொழில் கண்டிலாமையில், அன்பினால் உயிர்
                                         பேணிய
நெஞ்சினாள் தொழில் கண்டிலா மகன் நின்று நீடு அழவே, பகை
விஞ்சினார் தொழில் கொண்டு, வாள் வழி வெம் புணீர் உக
                                         வீவன் ஆல்


       நஞ்சு போன்ற படை வீரர் செயல் நோக்கம் அறிந்த ஒரு தாய்
மறைவானதென்று ஓரிடத்தை நாடினாள். ஆயினும் தன் இளமையின்
காரணமாக, அச்சங் கொண்டவர் செய்யுந் தொழிலை அனுபவத்திற் கண்டிராத மகன் அன்பினால் தன் உயிரைப் பேண முயன்ற நெஞ்சம்
படைத்த அத்தாயின் செயலைப் புரிந்து கொள்ளாத மகன் நெடு நேரம்
விடாது அழுதான். அழவே பகை மிஞ்சிய அப்படை வீரர் விரைந்து
செயல்பட, வாளின் வழியே வெப்பமான குருதி வழிய அம்மகன் சாவான்.

 
                    80
இடிக்கு வார்சில ரிகழ்வி னோடெதி
     ருடற்று வார்சில ரிணையடி
பிடிக்கு வார்சிலர் தரையி னோடுடல்
     புடைக்கு வார்சிலர் பிதிரநெய்
யடிக்கு வார்சில ரணைகை யோடுட
     றுமிக்கு வார்சில ரணுவெனத்
தடிக்கு வார்சிலர் தறிக்கு வார்சிலர்
     தணிக்கு வாருயி ரெவருமே.
 
இடிக்குவார் சிலர்; இகழ்வினோடு எதிர் உடற்றுவார் சிலர்;
                                         இணைஅடி
பிடிக்குவார் சிலர். தரையினோடு உடல் புடைக்குவார் சிலர்;
                                         பிதிர நெய்
அடிக்குவார் சிலர்; அணை கையோடு உடல் துமிக்குவார் சிலர்;
                                         அணு எனத்
தடிக்குவார் சிலர்; தறிக்கு வார்சிலர், தணிக்குவார் உயிர்
                                         எவருமே.