|
சில
தாய்மார் கொல்ல வந்த படை வீரரை இடித்துத் தள்ளுவர்;
சிலர் இகழ்ந்து பேசி எதிர் நின்று மல்லாடுவர்; சிலர் அவர்தம் இரு
அடிகளையும் கட்டிப் பிடித்துக் கெஞ்சுவர். படை வீரருள் சிலர் அவ்வாறு
கெஞ்சியவர் உடலைத் தரையோடு மோதுவர்; சிலர் உதிரம் சிதறுமாறு
அடிப்பர்; சிலர் குழந்தையை அணைத்த கையோடு உடலை வெட்டுவர்;
சிலர் உடலை அணுவணுவாக வெட்டுவார்; சிலர் அங்கமங்கமாகத் தறிப்பர்.
இவ்வாறு படை வீரர் எல்லோருமே குழந்தைகளின் உயிரைப் போக்குவர்.
முன்
மூன்றும் தாய்மார் செயலாகவும், பின்னவை படை வீரர்
செயலாகவும் கொள்க. 'தடிகுவார் என்பது ஓசை நயம் பற்றித் 'தடிக்குவார்'
என நின்றது.
| 81 |
உருவி
யேந்திய வுவணி மின் விழி
யுருவ
வெய்துறீஇ யுளையுளம்
வெருவி மாழ்கிட விடிமு ழங்கொலி
மெலிய
மேவல ருரறவே
கருவி மாசனை குழலி னன்னையர்
கலுழு
கண்மழை கடுகலோ
டருவி யாகிய குருதி நெய்மக
ரணையி
லாதுக விடுவரால். |
| |
உருவி ஏந்திய
உவணி மின் விழி உருவ, வெய்து உறீஇ உளை உளம்
வெருவி மாழ்கிட இடி முழங்கு ஒலி மெலிய மேவலர் உரறவே,
கருவி மாசு அனை குழலின் அன்னையர் கலுழு கண்மழை
கடுகலோடு,
அருவியாகிய குருதி நெய் மகர் அணை இலாது உக விடுவர் ஆல். |
பகைவராகிய
படை வீரர் உறையினின்று உருவிப் பிடித்த வாளின்
மின்னலொளி கண்ணைப் பறிக்க, வெதும்பி வருந்தும் மனம் அஞ்சி
மயங்குமாறு இடி முழக்கத்தின் ஒலியும் மெலியுமாறு அவர்களே முழங்கவும்,
இடி முதலிய கருவிகளைக் கொண்டுள்ள கருமேகம் போன்ற
கூந்தலையுடைய தாய்மார் அழுகின்ற கண்ணின் மழை வெள்ளம் விரைந்து
வருதலோடு, அம்மக்கள் அருவியாகிய இரத்த நெய்யை அணைக்குள்
அடங்காவண்ணம் சொரிந்து நிற்பர்.
|