|
வாளின்
ஒளி மின்னலாகவும், பகைவர் ஒலி இடியாகவும், தாய்மார்
கூந்தல் கருமேகமாகவும், அவர்தம் கண்ணீர் மழையாகவும், குழந்தைகள்
சொரிந்த குருதி அருவியாகவும், அவற்றின் பெருக்கம் அணைக்குள்
அடங்காததாகவும் கொள்க. உறீஇ - உற்று. கருவி மாசு - இடி மின்னல்
போன்ற கருவிகளைத் தன்னுள் அடக்கிய மேகம்; கருமேகம். விடுவரால்
என்றவிடத்து 'ஆல்' அசை.
| 82 |
முலைய
ணிச்சுத ரகல வேயழு
முலையெ
னச்சொரி யமுதுகத்
தலைய ணிச்சுத ரகல வேகமழ்
தலையி
ருட்கவி னழிவிட
நிலைய ணிச்சுத ரகல வேயினி
நிலையி
ரேமென விழவிழ
விலைய ணிச்சுத ரகல வேவினை
விழைவி
றாயவர் மெலிவரே. |
| |
முலை
அணிச் சுதர் அகலவே அழுமுலை எனச் சொரி அழுது உக,
தலை அணிச் சுதர் அகலவே கமழ் தலை இருள் கவின் அழி விட,
நிலை அணிச் சுதர் அகலவே, ''இனி நிலை இரேம்!'' என விழ விழ,
விலை அணிச் சுதர் அகலவே வினை விழைவு இல் தாயர் மெலிவரே. |
முலைக்கு
அணியாக விளங்கிய புதல்வர் மடிந்து அகன்றமையால்
அழும் முலை போல அம்முலை சொரிகின்ற பால் தரையில் சிந்தியது, தம்
தலைக்கு அணியாக விளங்கிய புதல்வர் மடிந்து மறைந்தமையால் மணம்
கமழ்கின்ற தலையின் இருள் நிற அழகு அழியவிடப்பட்டது. உலகத்திற்கு
அணிகலனாக விளங்கிய மக்கள் இறந்து நீங்கியமையால், ''இனி உலகத்தில்
வாழ்ந்திரோம்!'' என ஆங்காங்கு வீழ்ந்து கிடந்தனர். விலைமிக்க
அணிகலன் போன்ற தம் புதல்வர் மாய்ந்து போயினமையால் எச்செயலிலும்
நாட்டம் இல்லாது இவ்வாறெல்லாம் தாய்மார் வாட்டமடைவர்.
அழிவிட
- அழியவிட. நிலை அணி என்பதனை 'நிலைத்த அணி,
எனவும் நிலை இரேம் என்பதனை 'நிலைத்திரேம்' எனவும் கொள்ளலாம்.
|