"பான் இறைவன்
சொக்கர் வான் பந்தல் கீழ் விளக்கு ஏந்த,
ஈன் இறைவன் அறு தானை இற்று அழிந்த நிலை கண்டான்;
வான் இறைவன் திறம் கண்டான்; வாழ்க்கை அறநகை கண்டான்;
தான் இறைவன் அலன் என்னத் தளர்ந்து அஞ்சி ஓடினன். |
ஞாயிறு
என்னும் தலைவன் செவ்வானம் என்னும் பந்தலின் கீழ்
விளக்கு ஏந்தி வந்தான். வரவும், ஈனம் கொண்ட சினக்கரன் என்னும்
அரசன் தனது ஆறு வகைப் படையும் இறந்து அழிந்த நிலையைக்
கண்டான்; அதன் மூலம் வானத்திலுள்ள ஆண்டவனின் ஆற்றலைக்
கண்டான்; தன் வாழ்க்கை அறத் தக்க இகழ்ச்சியைக் கண்டான்; தான் ஓர்
அரசனும் அல்லன் என்று தளர்ந்து சொல்லி, அங்கிருந்து அஞ்சி ஓடினான்.
| 76 |
நெடிதழுங்கிப்
பெருங்கள்வ னீதிதிறந் திநந்தென்னக்
கொடிதழுங்கி யெஞ்சவன்றக் கொலைகாண விளியாக்கோன்
கடிதழுங்கி யோடவெதிர் கடுகிநகை யுய்த்தாயென்
றிடிதழுங்கி வீழ்ந்தனைய விருமைந்தர் கரத்திறந்தான். |
| |
|
'நெடிது அழுங்கிப்
பெருங் கள்வன் நீதி திறத்து இறந்து என்ன,
கொடிது அழுங்கி எஞ்ச அன்று அக் கொலை காண விளியாக் கோன்,
கடிது அழுங்கி ஓட, எதிர் கடுகி, "நகை உய்த்தாய்!" என்று,
இடி தழுங்கி வீழ்ந்து அனைய இரு மைந்தர் கரத்து இறந்தான்.
|
பெரிய
கள்வன் பிடிபட்டு நீதியின் திறத்தால் நெடிது வருந்தி இறந்தது
போல, கொடிதாக வருந்தி மெலிய அன்று தன் படைகளின் கொலையைக்
காணுமாறு அவ்வரசன் இறவாமல் தப்பினான்; அவ்வாறு தப்பியவன் வருந்தி
விரைந்து ஓடினான்; அப்பொழுது இடி தன்மீது ஓசையோடு விழுந்தாற்போல,
அவன் இருபுதல்வர் எதிரே விரைந்து வந்து, "எமக்கெல்லாம் இகழ்ச்சி
விளைவித்தாய்!" என்று கூறிய போதே அவர்கள் கையால் வெட்டுண்டு
இறந்தான்.
'இடிதழுங்கி'
என்ற விடத்துத் 'தழங்கி' என்ற சொல் எதுகை பற்றித்
'தழுங்கி' எனத்திரிந்து நின்றது. புதல்வரின் திடீர்த் தாக்குதலுக்கு இடியும்,
அவர் கடிந்துரைக்கு இடியோசையும் உவமை.
|