|
இங்குக்
குண்ணன் சினக்கரன் வரலாற்றை நிறைவு செய்கிறான்.
அவனே எடுத்துக் கொண்ட பொருளுக்கு விளக்கமாக நபூக்கன்
செய்தியையும் தொடர்ந்து கூறுகிறான்.
நபூக்கன்
நலிவு
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 77 |
மஞ்சிவர்
குன்றிற் றெண்ணீர்
வழங்குமந்
நாட்டிற் பின்னா
ணஞ்சிவர் சினத்திற் காய்ந்த
நபூக்கனென்
றரசன் செங்கோ
னெஞ்சிவர் செருக்கிற் கோட
நீண்டநாட்
டெங்கும் யூதர்
வீஞ்சிவ ரிறைவற் றாழ்தல்
வினைமிக
விலக்கி னானே. |
| |
"மஞ்சு இவர்
குன்றின் தெள் நீர் வழங்கும் அந்நாட்டில், பின் நாள்,
நஞ்சு இவர் சினத்தின் காய்ந்த நபூக்கன் என்று அரசன், செங்கோல்
நெஞ்சு இவர் செருக்கின் கோட, நீண்ட நாட்டு எங்கும் யூதர்
விஞ்சு இவர் இறைவன் தாழ்தல் வினை மிக விலக்கினானே. |
மேகங்கள்
தவழும் மலையினின்று இறங்கிய தெளிந்த நீர் எங்கும்
கிடைக்கும் அதே அசீரிய நாட்டில், பிற்காலத்தில், நஞ்சு தவழும் சினத்தால்
காய்ந்து கொண்டிருந்த நபூக்கன் என்னும் அரசன் ஆண்டான். அவன் தன்
நெஞ்சில் தவழ்ந்த அகந்தையினால் தன் செங்கோல் கொடுங்கோலாய்
வளையுமாறு, பரந்து கிடந்த தன் நாட்டில் எங்குமுள்ள யூதர்கள்
எத்தெய்வங்களினும் மேம்பட்டு விளங்குகின்ற ஆண்டவனைத் தொழும்
செயலை மிகக் கடுமையாக விலக்கினான்.
இவ்வாறு
தொடரும் நிகழ்ச்சி பழைய ஏற்பாடு, தானியேல் 3 -ம்,
4 -ம் அதிகாரம் காண்க.
|